ஒரு நிபந்தனை விதித்தாள்
என்னிடம்........
நிபந்தனை
என்னவோ
துள்ளிவரும்
காளையை அடக்க வேண்டுமோ?
ஊர் எல்லை
இளவட்ட கல்லை தூக்க வேண்டுமோ?
சமுத்திரத்தை
நீந்தி கடக்க வேண்டுமோ?
காற்றை பிடித்து
காண்பிக்க வேண்டுமோ?
மதம் கொண்ட யானையிடம்
சண்டை இட வேண்டுமோ?
வில்லை
வளைக்க வேண்டுமோ?
வானத்தை
கிழிக்க வேண்டுமோ?
வைகுண்டத்தை
காண வேண்டுமோ?
என்றேன் அவளிடம்....
அவளோ
இல்லை இல்லை
ஒரு ஆயிரத்திற்கு மட்டும்
சில்லறை வாங்கி கொடு
என்றாள் என்னிடம்.....
நானோ
மறந்துவிட்டேன்
அவளிடம்
கேட்ட முத்தத்தை அல்ல.
அவளிடம்
கொண்ட காதலை................
(கொஞ்சமாவாடா நிக்குது பேங்க்ல கூட்டம்)
கருத்துரையிடுக Facebook Disqus