0
ஐபோனில்..
வாட்ஸ்ஆப் அதன் வாய்ஸ் கால் அம்சத்தை அறிமுகம் செய்து மாதங்கள் ஆகிற நிலையில் சமீபத்தில் அதன் புதிய வீடியோ கால் அம்சத்தையும் அறிமுகம் செய்தது. ஆனால், புதிய வீடியோ காலிங் அம்சத்தில் நம் தேவைகளுக்கு ஏற்ப சில அமைப்புகளை அமைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா.?

உதாரணமாக, வாட்ஸ்ஆப் ஆனது உங்களுக்கு உள்வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு வெவ்வேறு ரிங்டோன்கள் அமைக்க அனுமதிக்கிறது. இந்த வசதி மூலம் உங்களுக்கு வரும் அழைப்புகள் அல்லது செய்திகள் ஆகிவைகளுக்கு முன்னுரிமை வழங்குதலை உங்களால் நிகழ்த்திக் கொள்ள முடியும்.

அப்படியாக உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் ஆகியவைகளின் வாட்ஸ்ஆப் ரிங்டோனை மாற்றுவதற்கான எளிய தந்திரம் இதோ.!
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐபோனில்..

வழிமுறை #01 : உங்களின் ஐபோன் காண்டாக்ட்ஸ் ஆப்பிற்கு செல்லவும், உங்களுக்கு விருப்ப ரிங்டோனைத் தேர்ந்தெடுக்க விரும்பும் தொடர்பை தேர்வு செய்யவும்.

வழிமுறை #02

இப்போது திரையின் மேல் வலது மூலையில் உள்ள எடிட் ஆப்ஷனை டாப் செய்யவும். பின்னர் ஒரு ரிங்டோன் தேர்வு செய்து உங்கள் ஐபோனை ரீஸ்டார்ட் செய்யவும்.

பின்குறிப்பு

கஸ்டம் நோட்டிபிகேஷன்களுக்கான ரிங்டோன் அமைக்க செட்டிங்ஸ் > நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ் செல்லவும்

ஆண்ட்ராய்டில்..

வழிமுறை #01 : முதலில் மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகள் அதாவது செட்டிங்ஸ் டாப் செய்து நோட்டிபிகேஷன்ஸ் ஆப்ஷனை செலெக்ட் செய்யவும்

வழிமுறை #02

நோட்டிபிகேஷனுக்கு அடியில் நீங்கள் நோட்டிபிகேஷன் டோன் என பெயரிடப்பட்ட ஒரு ஆப்ஷனை பார்க்க முடியும். அதை டாப் செய்ய, இப்போது நீங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்ட எந்த ரிங்டோனையும் தேர்வு செய்துக்கொள்ள முடியும்

கருத்துரையிடுக Disqus

 
Top