0
சமீபத்தில் ஆப்பிள் ஸ்டோரில் கள்ள ஷாப்பிங் ஆப்ஸ்கள், பயனர்களின் கிரெடிட் அட்டை விவரங்களை கண்டறிய நூற்றுக்கணக்கான போலி ஆப்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்றே, கூகுள் ப்ளே ஸ்டோரிலும் பயனர்களின் முக்கிய தகவல்களை திருடும் முதன்மை நோக்கம் கொண்ட ஆப்ஸ்கள் கிடைக்கப் பெறுகின்றன. எரிச்சலூட்டும் இந்த செயல்பாடுகள் இறுதியில் மிகவும் ஆபத்தான ஒன்றாக மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்களை கண்டறிவது எப்படி.?


தலைப்பு

தலைப்பு

முதலில் கிடைக்கப்பெறும் ஆப்பின் தலைப்பு மற்றும் விவரத்தை சரிபார்க்வும்.உதாரணமாக, நீங்கள் "Flipkart" என்ற ஒரு பயன்பாட்டை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், தீங்குவிளைப்பவர்கள் "Flipkart" போன்றே "Fllpkart" சற்று மாறுபட்ட பெயரைப் பயன்படுத்துவார்கள்.

டெவலப்பர்ஸ் ரெப்புட்டேஷன்

அடுத்தபடியாக அந்த ஆப்பின் டெவலப்பர்ஸ் ரெப்புட்டேஷன்தனை பரிசோதனை செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்டபெயரை கூகுள் செய்து பார்ப்பதில் மூலம் நீங்கள் குறிப்பிட்ட ஆப்பின் டெவலப்பர்ஸ் ரெப்புட்டேஷன்தனை பரிசோதனை செய்யலாம். நம்பகமான தகவல்களை பெற்றால் நீங்கள் தொடரலாம்.

இணங்கிய அனுமதி

ஒரு பயன்பாட்டை வாங்கும் கவனமாக பயன்பாட்டின் பெர்மிஷன்களை படிக்க வேண்டும். ஆப்ஸ் அதன் அம்சங்களுடன் நல்ல இணங்கிய அனுமதிகளை கேட்டால், பயன்பாட்டை நிறுவவும். உங்கள் தொடர்புகள், எஸ்எம்எஸ், மற்றும் பிற பொருட்களின் அனுமதிகளை கேட்டால் அதை தவிர்க்கவும்.

ரீவியூஸ்

மேலும், ப்ளே ஸ்டோரில் இருந்து ஒரு பயன்பாட்டை வாங்கும் முன், சில நேரம் முதலீடு மற்றும் அதன் விமர்சனங்களை கவனமாக படிக்க வேண்டியதும் அவசியம். உண்மையான ஆப் என்றால் ஆயிரக்கணக்கான விமர்சனங்க கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தள்ளுபடிகள்

இறுதியாக, ஆப்ஸ் மீது பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது என்றால்அதில் விழ வேண்டாம். அந்த பயன்பாடுகள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து முக்கிய தரவுகளை பெறு முடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top