*கையில் பேருந்துக்கு காசில்லாமல் பல கிலோமீட்டர்கள் வெயிலில் நடந்தது.
*தூங்கி எழுந்தால் பசிக்கும் என்று, வேலை தேடிய நாட்களில் மதியத்தில் எழுந்தது.
*பார்லே ஜி மூன்று ரூபாய் பிஸ்க்ட்டை நீரில் முக்கி சாப்பிட்டால் கூடுதலாக கொஞ்ச நேரம் பசிக்காமல் இருக்கும் என்று கண்டுபிடித்தது.
*நேர்முகத்தேர்வுக்கு போகும்போது இஸ்திரி செய்ய காசில்லாமல், வெயிலில் காய்ந்தவுடன் துணியை மடித்து வைத்தது.
*நேர்முகத்தேர்வுக்கு போகும்போது ஷு வுக்கு பாலிஷ் போட காசில்லாமல், தேங்காய் எண்ணெய்யை தேய்த்துக்கொண்டுபோனது.
*நேர்முகத்தேர்வு முடிந்து வெளியே வந்த நண்பனிடம் இருந்து இரவலாக, கழுத்தில் கட்டும் டையை வாங்கிக்கொண்டு அடுத்து நான் உள்ளே ஓடியது.
*வேலை தேட போகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்களிடம் பணம் கேட்க கூடாது என்ற வைராக்யத்தை கடைசி வரை காப்பற்றியது.
*அறை வாடகை கொடுக்க பணம் இல்லாமல், அறையில் இருந்த ஐந்து நண்பர்களும் சேர்ந்து ரத்த தானம் செய்து, அதில் வந்த பணத்தை எடுத்து வாடகை கொடுத்து விட்டு,
அவர்கள் தந்த மாசா வை மட்டும் குடித்து வேறு எதுவும் சாப்பிட காசில்லாமல், அரைமயக்கத்துடன் தூங்கியது.
அன்று, இந்த வாழ்க்கை வாழ்ந்த போதும், ஒருநாள் கூட சிரிக்காமல் இருந்ததில்லை நான்..!!
இன்றோ, இந்த இயந்திர வாழ்க்கை "ஊதியம்" என்ற ஒன்றை தந்துவிட்டு, அதற்கு விலையாக, அது என்னுடைய பெரும்பாலான மகிழ்ச்சியை பிடுங்கி கொண்டதாகவே நினைக்கிறேன்..!!
பொன்னையும், மண்ணையும் தேடி அலையும் இன்றைய வாழ்க்கையிலே,
சிறிதளவு "மகிழ்ச்சி" தேடிக் கொண்டிருக்கிறேன். "கிடைக்கும்" என்ற நம்பிக்கையோடு...........!!!!!.
சிறிதளவு "மகிழ்ச்சி" தேடிக் கொண்டிருக்கிறேன். "கிடைக்கும்" என்ற நம்பிக்கையோடு...........!!!!!.
கருத்துரையிடுக Facebook Disqus