இன்றைய தொகுப்பிலும் பல சுவாரஸ்யமான செய்திகளும், தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவை நிச்சயம் உங்களை மெர்சலாக வைக்கும் என்பதில் ஐயமில்லை.
நெடுஞ்சாலைகளில்
பல மணி நேரம் காரை ஓட்டிச்செல்லும்போது தொடர்ந்து ஆக்சிலரேட்டரை
அழுத்திச் செல்லும்போது வலது கால் அயர்ச்சி அடைவது வழக்கம். இதற்கு
உபாயமாக, ஆக்சிலரேட்டரை கொடுக்காமல் கார் குறிப்பிட்ட வேகத்தில்
தொடர்ந்து பயணிப்பதற்கான வசதிதான் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம். இன்றைக்கு பல
கார்களில் இந்த வசதி சர்வ சாதாரணம். 1948ம் ஆண்டு இந்த க்ரூஸ் கன்ட்ரோல்
சிஸ்டத்தை கண்டறிந்தவர் ரால்ஃப் டீட்டர் என்பவர்தான். இதில் என்ன
சுவாரஸ்யம் என்கிறீர்களா? ரால்ஃப் டீட்டர் பார்வையற்றவர். அவரது வழக்கறிஞர்
கார் ஓட்டும்போது வேகத்தை கூட்டிக் குறைத்த வண்ணம் இருந்ததை கண்டு
எரிச்சலிலும், அதற்கு தீர்வாகவும், இந்த க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை
கண்டறிந்தாராம்.
அமெரிக்காவை
சேர்ந்த இர்வ் கோர்டன் என்பவர் தனது 1966 வால்வோ பி1800 காரில் 30 லட்சம்
மைல்கள் ஓட்டியிருக்கிறார். மொத்தம் 47 ஆண்டுகள் அந்த காரை அவர்
பயன்படுத்தியிருக்கிறார். உலகிலேயே அதிக தூரம் பயணித்த கார் என்ற கின்னஸ்
சாதனையாக இது குறிப்பிடப்படுகிறது.
உலகிலேயே
அதிக மறுசுழற்சி பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளில் ஒன்று கார். ஆம்,
காரில் இருக்கும் 95 சதவீத பாகங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்பட
முடியுமாம். உலகில் ஆண்டுக்கு 27 மில்லியன் கார்களின் உதிரிபாகங்கள்
மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
காரில்
டேஷ்போர்டு அமைப்பு இன்று மிக முக்கியமானதாகவிட்டது. கட்டுப்பாட்டு
கருவிகள், ஏசி சிஸ்டம், பொருட்களை பாதுகாப்பது என பல்வேறு அம்சங்களுடன்
இன்றைக்கு டேஷ்போர்டு அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால், முதல்முதலில்
இந்த டேஷ்போர்டு அமைப்பு உருவானதற்கான காரணம் ஆச்சரியப்படுத்துவதாக
இருக்கும். வண்டிகளில் பூட்டப்படும் குதிரைகள் ஓடும்போது தெறிக்கும் சேறு,
சகதி மற்றும் சாணத்திலிருந்து உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு பாதிப்பு
ஏற்படத்தக்கூடாது என்பதற்காகவே மரத்தாலான தடுப்பு அமைப்பு
உருவாக்கப்பட்டது.
உலகம்
முழுவதும் நிகழ்நேர கணக்கின்படி, 100 கோடி கார்கள் தற்போது பயன்பாட்டில்
இருக்கின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.78 லட்சம் கார்கள் உலக அளவில்
உற்பத்தி செய்யப்படுகின்றன.
தலைமுடியை
குத்திட்டு நிற்க செய்யும் ஒரு விஷயம் இதுவாக கூறலாம். ரிமோட் சாவியை
தலையில் வைத்து பிடித்தால், அதன் சிக்னல் தரும் சுற்றளவு இருமடங்கு
அதிகரிக்குமாம். அதாவது, மனிதனின் கபாலம், ஆம்பிளிஃபயர் போன்று செயல்படும்
என்று சொல்லப்படுகிறது.
பெட்ரோல்,
டீசல் கார்களை போன்று மின்சார கார்களில் இருக்கும் மின்
மோட்டார்களிலிருந்து சப்தம் வராது. இது குழந்தைகள் மற்றும்
பார்வையற்றவர்களுக்கு பெரும் அபாயத்தை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த குறையை போக்குவதற்காக பெட்ரோல், டீசல் கார்கள் போன்று மின்சார
கார்களிலும் சப்தம் தருவதற்கான விசேஷ ஒலி கருவியை நிசான் உருவாக்கி
வருகிறது. இதே போன்று பல கார் நிறுவனங்களும் இந்த ஒலி தரும் சாதனத்தை
உருவாக்கி வருகின்றனர்.
கருத்துரையிடுக Facebook Disqus