மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார்.
அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ண முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது.
இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார்.
முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும்.
பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார்.
காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்..
பொண்ண வளக்க சொன்னா பேய்ய வளர்த்திருக்கிற...
சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.
அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்..
ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்..
மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது.
கருத்துரையிடுக Facebook Disqus