ஒரு
முறை பயன்படுத்திய உடனே துணி துவைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கெட்ட
வாடை, அழுக்கு அல்லது வியர்வை அதிகம் உறுஞ்சி இருந்தால் மட்டுமே துவைத்தால்
போதும்.
வெளிர்
நிற துணிகளை வண்ண துணிகளுடன் கலக்க கூடாது. அது வெள்ளை என்று
மட்டுமில்லாமல் எதுவாக இருந்தாலும் இரண்டையும் சேர்த்து துவைக்க கூடாது.
அதிக
நேரம் சோப்பு நீரில் ஊறவைத்தல், அதிக நேரம் மெஷினில் துவைத்தல் போன்றவை
அழுக்கு போக்க செய்யும் என எண்ண வேண்டாம். இது துணி மற்றும் ஆடையின் தரத்தை
குறைக்க செய்யும்.
சிலர்
அதிகப்படியான டிடர்ஜென்ட் பயன்படுத்தினால் அழுக்கு முழுக்க போகும் என
கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. இதுவும் ஆடை மற்றும் நூலின் தரத்தை
இழக்க செய்யும்.
உள்ளாடைகளை சோப்பு போட்டு தான் துவைக்க வேண்டும் என்றில்லை. நீங்கள் குளித்த பிறகு அலாசி போட்டால் கூட போதுமானது.
சட்டை,
பேன்ட் எதுவாக இருந்தாலும் துவைக்கும் போது பட்டங்கள், ஜிப் போன்றவற்றை
அவிழ்த்து துவைக்க வேண்டும். இல்லையேல் அதன் இறுக்கம் குறைந்து போகலாம்,
பட்டன் வலுவிழந்து போகலாம்.
துவைத்த
பிறகு நீண்ட நேரம் துணியை பக்கெட்டில் அல்லது வாஷிங் மெஷினில் போட்டு
வைக்க வேண்டாம். இதனால் பாக்டீரியாக்கள் தாக்கம் பெருகும்.
வாஷிங் மெஷின் பயன்படுத்துவோர், உங்கள் துணிகளின் மீது விருப்பம் கொண்டிருந்தால், மெஷினையும் அவ்வப்போது கழுவ வேண்டும்.
கருத்துரையிடுக Facebook Disqus