0

முதலில் சாட் ஹெட்ஸ் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது இங்கே அவசியமாகிறது. அதாவது நீங்கள் மற்ற பயன்பாடுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதோ அல்லது ஹோம் திரையில் இருக்கும் போதோ உங்களுக்கு மெஸேன்ஞ்சரில் யாரவது மெஸேஜ் அனுப்ப அந்த நபரின் சாட் ஹெட் ஐகான் ஆனது உங்களது ஸ்க்ரீனில் தோன்றும் அதனை கொண்டு நீங்கள் விரைவில் அந்த ஆப்பை அணுக முடியும்.



1. இந்த வசதியை பெற, நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டாஸ்டொவ் (Dashdow) என்ற ஒரு பயன்பாட்டை பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

2. குறிப்பிட்ட பயன்பாட்டை நிறுவிய பின், அதை திறக்கவும், பின்னர் நோட்டிபிகேஷன் அக்சஸ் விருப்பத்தை 'ஆன்' செய்யவும். நீங்கள் இப்போது ஆப்ஸ் பெர்மிஷன்ஸ்-க்கு திசைதிருப்பப்படுவீர்கள்.

3. செட்டிங்ஸ் மெனு சென்று டாஷ்டொவ் பார் வாட்ஸ்ஆப் டோகில்-தனை ஆன் செய்யவும். பின்னர் அதை எனேபிள் செய்யும் அணுகலை [பெறுவீர்கள் அங்கே ஓகே என்பதை கிளிக் செய்யவும்.

4. அவ்வளவு தான். நீங்கள் மேலே கூறப்பட்டுள்ளவைகளை சரியாக செய்ய ஒரு சக்ஸஸ் மெஸேஜ் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர் உங்கள் பேஸ்புக் போன்றே வாட்ஸ்ஆப்பிலும் சாட் ஹெட்ஸ் பெறலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top