0

 
 
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம். கல்வி கற்பதன் மூலம் ஒருவர் இந்த பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார்.

எனவே, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதல் அடியை அன்னை சரஸ்வதியை பூஜை செய்து கொண்டாடி தொடங்குகின்றோம்.

 
 
பல மாநிலங்களில் இந்த அக்ஷரப்யாஷம் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது. அது கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்துகின்றது.

இந்த நாளில் மூன்று விதமான சக்திகளான இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள் ஒன்றிணைகின்றன. இந்த மூன்று விதமான சக்திகள் இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன.

 
 
குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.

அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர்.

எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

 
 
ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேழும் இது நித்தியத்தை குறிக்கின்றது.

எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சம்ஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது.

இதுவே அனைத்தினுடைய தொடக்கம். இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.

 
 
ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள்.

இப்போதெல்லாம், குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். வங்கத்தில், குழந்தைகள் ஒரு சுண்ணாம்பு கட்டி கொண்டு ஒரு ஸ்லேட்டில் எழுத ஆரம்பிக்கின்றார்கள்.

 
 
வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top