0

பொதுவாக பெருவாரியான கார் வாங்குபவர்களின் முதல் தேர்வாக அமைந்திருக்கும் டீசல் எஞ்சின் கார்களின் பராமரிப்பு செலவு அதிகமாக காரணம் என்ன? மற்றும் டீசல் எஞ்சின் ஆயுட்காலம் பெட்ரோல் எஞ்சினை விட ஏன் குறைவாக உள்ளது அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

டீசல் கார் பராமரிப்பு செலவு காரணிகள்
  • டீசல் கார்கள் விலையும் கூடுதல் பராமரிப்பு செலவும் கூடுதல் ஆனால் டீசல் விலை குறைவு.. டீசல் விலை குறைவு என்பதால் மட்டும் டீசல் காரை நீங்கள் தேர்ந்தேடுத்தால் அது சரியான தேர்வு ஆகிவிடாது என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
  • டீசல் ஆனது பெட்ரோலை விட மிக குறைவான நேரத்திலே குரூட் ஆயில் சுத்திகரிப்பில் பெறப்படுகின்றது. ஆனால் பெட்ரோல் மிக நுன்னிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்படுவதால் தேவையற்ற கசடுகள் இருக்கவே இருக்காது. அதனால் எஞ்சின் பாதிப்புகள் குறைவு.
  • டீசல் இன்ஜின் மிக அதிகப்படியான அழுத்தத்தை தாங்கி கொண்டு டீசல் எஞ்சின் பாகங்கள் வேலை செய்யும். அதனால் மிக வலுகூட்டப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன ஆனாலும் பெட்ரோல் எஞ்சின் பாகங்களை விட அதிகமாக பாதிக்கப்படும்.
  • டீசல் என்ஜின் பராமரிப்பு பெட்ரோலை விட இருமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் அதிகப்படியான ஆயில் மாற்றம் தொடர்ந்து எஞ்சின் பராமரிப்பு என செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும்.
  • சரியான தொடர் பராமரிப்பு டீசல் வாகனங்களில் செய்ய தவறினால் செலவுக்கு பஞ்சம் இருக்காது.

  • அதுபோல டீசல் எஞ்சின்களின் உதிரிபாகங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் பாகத்தைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
  • உங்கள் டீசல் வாகனம் 4 லட்சம் கிமீ கடக்கின்று என்றால் உங்கள் எஞ்சினை முழுமையாக ஓவர்ஹாலிங் செய்வது நல்லது.இதன் மூலம் உங்கள் வாகனத்தின் ஆயுள் அதிகரிக்கும்.
  • முறையான பராமரிப்பு செய்தால் பெட்ரோல் எஞ்சினை விட மிக சிறப்பான ஆயுள் மற்றும் செயல்திறனை எதிர்பார்க்கலாம்.
  • டீசல் எஞ்சின் ஆயுட்காலம் குறைய காரணம் முறையான பராமரிப்பு இல்லாததே ஆகும்.

கருத்துரையிடுக Disqus

 
Top