0

புதிதாக பைக் வாங்கியபொழுது இருந்த பிக்அப் நாளுக்குநாள் குறைகின்றதா ? சர்வீஸ் செய்த பிறகு கிடைத்த பிக்அப் சில வாரங்களிலே குறைகின்றதா ? என்ன காரணம் பிக்அப் எவ்வாறு அதிகரிக்கலாம்..

பைக்கில் பிக்அப் குறைவதற்க்கான முக்கிய காரணமே முறையற்ற பராமரிப்பு , எரிபொருள் , என்ஜின் ஆயில் போன்றவை ஆகும். பைக்கில் பிக்அப் சிறப்பான முறையில் கிடைக்க என்ன செய்யலாம்.

1. காற்று பில்டர்
காற்று பில்டர் தூய்மையாக இல்லையெனில் சிறப்பான பிக்அப் கிடைக்காது. புழுதிகள் மற்றும் தூசுகள் காற்று பில்டரில் அதிகமாக அடைத்திருந்தால் என்ஜினுக்கு தேவை காற்றினை உறிஞ்சும்பொழுது காற்றின் அளவு சிறப்பாக இல்லை என்றால் பிக்அப் எதிர்பார்க்க முடியாது. 

எனவே ஒவ்வொரு 1000 கிமீக்கு ஒருமுறை காற்று பில்டரை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். தேவை ஏற்பட்டால் பில்டரை மாற்றிவிடுங்கள். 
 
2. எரிபொருள் தரம்
பெட்ரோல் அடிக்கும்பொழுது முடிந்தவரை ஒரே பெட்ரோல் நிலையத்தினை பயன்படுத்துங்கள். சிறப்பான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்பும்பொழுது மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்பி எந்த பெட்ரோல் பங்கில் நிரப்பினால் உங்களுக்கு சிறப்பான பிக்அப் மற்றும் மைலேஜ் தருகின்றது என்பதனை சோதியுங்கள்.

3. காற்று அழுத்தம்
டயர்களில் முறையான காற்று அழுத்தம் உள்ளதா என்பதனை வாரம் ஒருமுறை அவசியம் சோதியுங்கள். அவ்வாறு சோதனை செய்து சரியான அழுத்ததை பராமரிக்கும்பொழுது சிறப்பான மைலேஜ் மற்றும் பிக்அப் கிடைக்கும்.

4. என்ஜின் ஆயில்
தயாரிப்பாளர் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆயிலை மாற்ற தவறினால் நிச்சியமாக மைலேஜ் குறையும் . எனவே பைக் தயாரிப்பாளரின் பரிந்துரைக்கேற்ப என்ஜின் ஆயிலை மாற்றுவது மிக அவசியமாகும். அதேபோல குறைவான என்ஜின் ஆயில் உள்ளதா என்பதனை 2500கிமீ க்கு ஒருமுறை சோதனை செய்வது அவசியம்.

5. செயின் சோதனை
பைக் என்ஜினிலிருந்து ஆற்றலை கடத்தும் செயின்களின் மீது தனி கவனம் கொள்வது நலமாகும். இதன் மூலம் ஆற்றல் வீணாகமல் தடுக்க இயலும். செயின்க்கு கிரிஸ் மற்றும் டைட் செய்து பயன்படுத்துவும்

6. காலை நேரம்
காலை மற்றும் குளிர்ந்த நேரங்களில் பைக்கை இயக்க தொடங்கும் பொழுது சோக் பயன்படுத்தி ஸ்டார்ட் செய்யுங்கள். சில நிமிடம் பைக்கினை ஸ்டார்ட் செய்து ஓடவிட்ட பின்னர் இயக்க தொடங்கினால் நல்லது. மேலும் செல்ஃப் ஸ்டார்டினை தவிர்த்து கிக் ஸ்டார்டினை பயன்படுத்தவும்.

7. கார்புரேட்டர்
கார்புரேட்டர் டியூனிங் பொறுத்து பிக்அப் அதிகரிக்கலாம். காற்றினை சற்று குறைத்து எரிபொருளை அதிகரித்தால் சிறப்பான பிக்அப் கிடைக்கும்.
பைக் பிக்அப் அதிகரிக்க நீங்கள் பயன்படுத்தும் வழிமுறைகளை பகிர்ந்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top