0

ஒரு அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அந்த அணியின் தலைவர்தான். ஒரு அணியில் உள்ள உறுப்பினர்களின் முழு திறமைகளில் வெளிக்கொண்டு வருவது அந்த அணியின் தலைவர் எடுக்கும் நடவடிக்கைகள், ஊக்குவிப்புகள் ஆகியவற்றில்தான் உள்ளது. ரிக்கா பட்டாச்சார்யா என்பவர் ஒரு அணி எவ்வாறு செயல்பட்டால் முழு செயல் திறனைக் கொண்டு வர முடியும் என்பதற்கு ஐந்து வழிகளைக் கூறியுள்ளார். அவற்றை தற்போது பார்ப்போம்.

தனது அணியின் உறுப்பினர்களுக்குச் சுவாரஸ்யமான இலக்குகளை அணித்தலைவர் நிர்ணயிக்க வேண்டும். இது கடினமான பணி என்று அணி உறுப்பினர்களின் மனதில் படாத வகையில் அவர்களின் முழு திறமைகளையும் கொண்டு வரும் வகையில் இலக்கு கிரியேட்டிவ் ஆக இருக்க வேண்டும்.

ஒரு பணியின் இலக்கைச் சுட்டி காட்டுவதில் அணியின் தலைவர் எளிமைப் படுத்த வேண்டும். இலக்கை அடைய ஏற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்புகள், அதனைச் செயல்படுத்த ஏற்கப்படும் உறுதிமொழிகள் குறித்து அணித்தலைவர் குழுவினர்களுக்கு பொறுமையுடன் விளக்க வேண்டும்

அணித்தலைவர் ஒரு பொறுப்பின் அனைத்து அனுபவங்கள் மற்றும் செயல் திறனை முதலில் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தனது அணியின் உறுப்பினர்களுக்குக் கற்றுத்தர முடியும். மேலும் அணியின் செயல்திறனை அதிகரிக்க வேலைகளைப் பிரித்துக் கொடுக்க ஒரு அணித்தலைவருக்குத் திறமை இருக்க வேண்டும். இவ்வாறு பிரித்து கொடுப்பதால் அணியின் இலக்கு மிக எளிமையாவதோடு ஒவ்வொருவரின் தனித்திறமையையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கார்ப்பரேட் டிரைனிங் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்வாப்நில் காமெட் கூறியுள்ளார்.

ஒரு அணித்தலைவர், அணி பெற்று வரும் சிறுசிறு வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அணி உறுப்பினர்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த தூண்டுதல் அவர்களைப் பலமடங்கு வேலை செய்ய மும்முரம் காட்டும் வகையில் அமையும்.

ஒரு இலக்கைச் சரியாக முடிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய பணிகளை பக்காவாக திட்டமிட வேண்டும். என்னதான் அவசர பணியாக இருந்தாலும் உறுப்பினர்களின் தனி நபர் உணர்வுகளுக்குக் கண்டிப்பாக மதிப்பு தரவேண்டும் என்பதை மறக்கக் கூடாது.

கருத்துரையிடுக Disqus

 
Top