0
ஆன்லைனில் இருந்தால் மொபைல் சார்ஜ் குறைவது ஏன் என்று தெரியுமா?
இணையத்தில் இருந்தால் மொபைல் ஏன் சார்ஜ்ஜை இழக்கிறது?
ஒவ்வொரு மொபைல் பேட்டரியும் ஒவ்வொரு மின்னூட்ட அளவினைக் கொண்டது. அதை mAh என்னும் அளவுக்குறியீட்டு மூலம் குறிக்கப்படும். 
நாம் இணையத்தை பயன்படுத்தி பல்வேறு வலைத்தளத்திற்கு சென்று செய்தி சேகரிப்பதை சர்ஃபிங் என்று கூறுவர். 
ஆனால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். 
அதில் நாம் நொடிக்கு நொடி பல புகைப்படங்களையோ பாடல்களையோ காணொளியையோ பதிவேற்றுகின்றோம். 
அப்படி செய்கையில் நாம் select செய்த புகைப்படத்துடன் நம் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களும்(data) நம் அனுமதி இல்லாமல் திறக்கப்படுகின்றன. பதிவேற்றம் செய்த பின்னும் இந்த தகவல்கள் பின்திரையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கும். ஆனால் நாம் அதைக் கவனிக்க தவறுகிறோம். 
இதனால் அத்தகவல்கள் அனைத்தும் சார்ஜ்ஜை உறிஞ்சி எடுத்து மொபைலை சூடாக்கி பேட்டரியின் செயல்திறனை வெகுவாகக் குறைத்துவிடும்.
இதன் காரணமாகவே இணையத்தில் உலவும் போது சார்ஜ் எளிதில் இறங்கி விடுகின்றது. மேலும் பல செயலிகளை பயன்படுத்திவிட்டு அதனை ஃபோர்ஸ் ஸ்டாப் செய்யாமல் அப்படியே விட்டுவிடுகிறோம். இதுவும் ஒருவழியில் வாழ்க்கையைப் பாழாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top