0
 Image result for ஆண்களுக்கு சொட்டை
பெண்களுக்கு கூந்தல் உதிர்தல் பிரச்சனை இருந்தாலும் சொட்டை விழுவது குறைவுதான். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கு சொட்டை விழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் மரபணுதான். மரபயில் ரீதியாக தவிர வேறெந்த பிரச்சனைகளால் ஆண்களுக்கு சொட்டை விழுகிறது தெரியுமா?

அ. ட்ரைகோடிலோமேனியா:
குறிப்பிட்ட இடத்தில் முடியை இழுத்தாலோ, பிடுங்கினாலோ, அந்த பகுதியில் பாதிப்பு உண்டாகி, சொட்டை விழுவது தான் ட்ரைகோடிலோமேனியா. இது ஒரு மரபியல் கோளாறு. உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை அளித்தால் சரி செய்துவிடலாம்.

ஆ. அதிகமாக தலை சீவுதல்:
சில ஆண்கள் எப்போது பார்த்தாலும் தலை சீவிக் கொண்டேயிருப்பார்கள். அதிக அழுத்தம் தரப்படும்போது வேர்கால்கள் பாதிக்கப்படும்போது, கொத்து கொத்தாய் முடி உதிரும் அல்லது சொட்டை உண்டாகும்.

இ. தலையில் கொண்டை போடுவது:
இப்போது இது ட்ரெண்டாகி வருவதை பெரும் நகரங்களில் காண்கிறோம். அதிக முடியை வளர்த்தி இறுக்கமாக பின் உச்சியில் கொண்டை போடுவது. இது கண்டிப்பாக முன் சொட்டை உண்டாக காரணமாகிவிடும். முடிகளை இழுத்து கட்டப்படும்போது வேரோடு முடி வளம் பாதிக்கப்படுவதால் முன் சொட்டை உண்டாக காரணமாகிவிடும்

ஈ. மன அழுத்தம்:
மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசால் ஹார்மோன், முடியின் வேர்க்கால்கலில் புரதம் சேர்வதை தடுக்கின்றன. இதனால் அதிக அளவு முடி இதுர்தல் உண்டாகி இறுதியில் சொட்டை உண்டாக காரணமாகிவிடும்
.
உ. சோப்:
நிறைய ஆண்கள் தலைக்கு சோப் போட்டு குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். சருமத்திற்கும் தலையிலுள்ள சருமத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இவை கூந்தல் செல்களை பாதித்து முடி உதிர்தலை ஏற்படுத்திவிடும்.

ஊ. ஸ்டீராய்டு மருந்துகள்:
ஆண்கள் 6 பேக் செய்வதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்பவர்கள் இருக்கிறார்கள். இவை உடலில் கடும் விளைவை உண்டாக்கும். அதன் முதல் எதிரொலியாக உங்கள் முடி வளத்தில் தெரியும். சொட்டை உண்டாவதற்கு இதுவும் காரணம்.

எ. ஹெல்மெட்:
ஹெல்மெட் முடி உதிரவும் சொட்டை உண்டாகவும் காரணம்தான். ஆனால் அதற்காக ஹெல்மெட் போடாமல் போகாதீர்கள். முடியை விட தலை நமக்கு முக்கியம். ஹெல் மெட் போடுவதற்கு முன் தலையில் ஒரு பருத்தித் துணியை கட்டிக் கொண்டால் அதிகபப்டியான வியர்வையை அது உறிஞ்சு கொள்ளும். அவ்வப்போது ஹெல்மெட்டை சுத்தப்படுத்தி போடுங்கள். தொடர்ந்து உபயோகிக்காமல் சிக்னலில் கழட்டி பின் மாட்டுவது போன்ற செய்கையால் கூந்தலுக்கு பாதகம் உண்டாகாது.

ஏ. முடி அலங்கார ஜெல்:
கூந்தலை ஸ்பைக் போன்ற அலங்காரங்கள் செய்வதற்காக சிலர் ஜெல் மற்றும் க்ரீம் பயன்படுத்துவார்கள். அவற்றிலுள்ள அதிகபப்டியான ரசாயனங்கள் உங்கள் முடியின் வேர்க்கால்களுக்கு நச்சு விளைவிக்கும். இதனால் இளம் வயதிலேயே சொட்டை விழுவதற்கான சாத்தியங்கள் உள்ளன

கருத்துரையிடுக Disqus

 
Top