இந்தியாவில்
ஒருவர் பிறப்பதில் இருந்து, இறப்பது வரை கடைப்பிடிக்கப்படும் சடங்குகள்
பலவன இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை இன்றளவும் பின்பற்றி வரப்படுகின்றன.
ஆனால், அந்த சடங்குகள் எதற்காக கொண்டுவரப்பட்டது, ஏன் செய்கிறோம் என்று
தான் பலருக்கும் தெரியாது.
அதில், வீட்டில் ஒரு பெரியவர் இறந்தால்
அவரது மகனுக்கு மொட்டை அடிப்பார்கள். இந்த சடங்கு ஏன்? எதற்காக
பின்பற்றப்பட்டது என இங்கு காணலாம்...
முன்பு
வீட்டில் ஒரு ஆண் இறந்தால் அவரது மகனுக்கு மட்டும் இன்றி, அவரது
மனைவிக்கும் மொட்டை அடிப்பார்கள். மற்றும் அவரது மனைவி வாழ்நாள் முழுக்க
மொட்டை தலையுடன் தான் இருப்பார்கள். இந்த வழக்கம் காலத்தின் மாற்றத்தில்,
வாழ்வியல் மாற்றத்தில், நவநாகரீக வளர்ச்சியில் மாறி போனாது.
மனைவிக்கு
ஏன் மொட்டை அடித்தார்கள் என்பதற்கும் காரணம் கூறப்படுகிறது. பெண்களுக்கு
தலை முடி குறைவாக அல்லது தலை முடி இல்லை எனில், தாம்பத்திய எண்ணங்கள்
குறையும் என்றும் கூறுகின்றனர்.
அவர்களது
அழகு சார்ந்த ஈர்ப்பு குறையும் என்ற காரணம் காட்டியும், கணவன் இறந்த பிறகு
அந்த பெண் மீது வேறு ஆண்கள் / அந்த பெண் வேறு ஆண்கள் மீது ஆசைக் கொள்ள
கூடாது என்பதற்காகவும் இந்த சடங்கு பின்பற்றப்பட்டதாக சில நூல்களில்
கூறப்பட்டுள்ளன.
வீட்டில் பெரியவர் இறந்த மறுநாள் அல்லது அந்த நாள் மாலையே மகனுக்கு மொட்டை அடிப்பார்கள். இதற்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இதனால், அந்த ஆணுக்கு ஈகோ குறைந்து போகும், பொறுப்புகள் கூடும்,
நல்லொழுக்கத்துடன் திகழ்வார், தன்னலமற்று குடும்பத்திற்காக உழைப்பார்,
அடுத்து அவர் தான் அந்த குடும்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்ற
பொறுப்புணர்வுடன் செயல்படுவார் என கூறப்படுகிறது.
மற்றும்
மொட்டை அடிப்பதால் வெளியாட்களுக்கு அந்நபரின் வீட்டில் துக்கம்
ஏற்பட்டுள்ளது என அறிந்துக் கொள்வார்கள். எனவே, சூழ்நிலை அறிந்து அவரிடம்
நல்லப்படியாக நடந்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மொட்டை
அடிப்பதால் உளவியல் ரீதியாக அந்த நபரிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
உணர்வு ரீதியாக அவர் ஒருமுகப்படுத்தப்பட்டு குடும்பத்திற்கு தலைமை
தாங்குவார். இது குடும்பத்துடனான இறுக்கத்தை, பற்றை அதிகரிக்கும், நல்ல
மாற்றத்தை கொண்டுவரும் என கூறுகின்றனர்.
அன்று
இருந்த சூழலுக்கு ஏற்ப இந்த சடங்குகள் பினப்ற்றப்பட்டு இருக்கலாம். இன்று
வாழ்வியல், சூழல் அனைத்தும் மாறுப்பட்டு போய்விட்டது. இன்றும் மொட்டை
அடித்துக் கொள்ளும் பழக்கம் இருப்பினும், சிலர் வேலை, பணிபுரியும் இடம்
காரணம் காட்டி மொட்டை அடிக்க தயங்குவது உண்டு. மெல்ல, மெல்ல இந்த பழைய
சடங்கு முறை குறைந்து வருகிறது.
கருத்துரையிடுக Facebook Disqus