0


'பிரேக் தி ரூல்ஸ்' உலக அளவில் இளைஞர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும், அதிகளவில் இளைய பட்டாளம் விரும்பும் வாக்கியம். ஆசிரியர் பேச்சை மீறுவது, அப்பா சொல்வதை தட்டிக் கழிப்பது என பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை, மிக எளிதாக தகர்த்துவிடுவோம்.

எதற்கு எல்லாம் போராட வேண்டுமோ அதை தவிர்த்து, எதை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமோ அந்த எளிய விதிகளை தகர்த்தி செல்வது நாம் அதிகம் செய்வது. சாலையில் எச்சில் துப்புவதில் இருந்து, தெருக்களில் குப்பை போடுவதென நாம் தகர்த்தெறிந்த விதிகள் ஏராளம்.

அதற்கான சாட்சியங்கள் தான் இந்த தொகுப்பு...
ஓர் ஆட்டோவில் ஏற்றி செல்ல வேண்டிய காய்கறி மூட்டைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி சீழும் தம்பதி.
பஸ்ல மட்டுமில்ல, ட்ரைன்ளையும் ஃபுட் போர்டு அடிக்கிற ஒரே ஆளு நாம தான்!
எவ்வளோ பேருக்கு தெரியும்னு தெரியல, ட்ரைன்ல தலைய கொடுத்து இறந்து போறவங்க எண்ணிக்கைய விட, இதுமாதிரி ட்ரைன் வரும் போது க்ராஸ் பண்ணி உயிர் இழக்கிறவங்க எண்ணிக்கை தான் அதிகம்.
துப்பாதன்னு சொன்னா, துப்புவ்வோம். குப்பை போடாதன்னு சொன்னா, போடுவோம்.
சரியா சிக்னல நாம வண்டிய நிப்பாட்டினதா சரித்திரமே இல்ல.
அபாயம்னு தெரியும்... ஆனாலும் செய்வோம்.
நடைபாதையில நடக்கிறமோ இல்லையோ, வண்டி ஓட்டுவோம், கடை போட்டு வியாபாரம் பண்ணுவோம்.
ட்ராப்பிக் போலீசே விதிய மீறினா, மக்கள் என்ன பண்ணுவாங்க!
அப்பறம் எதுக்கு அதுல லேடீஸ் பஸ்னு ஒட்டனும்!?

கருத்துரையிடுக Disqus

 
Top