அந்த இரு வார்த்தைகளையும் அதிபர் பதவிக்கு வந்தவுடன் நிறைவேற்றும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார். அதன் முதல் படிதான் எச்.1பி. விசா சீர்திருத்தம் ஆகும். இந்த எச்.1விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.
ஆமாம், எச்.1பி விசா சீர்திருத்தம் என்ற சொன்னவுடன் எதற்காக இந்தியர்கள் ‘அய்யோ’, ‘அய்யோ’ என அலறுகிறார்கள்?. சாப்ட்வேர் நிறுவனங்களும் ஏன் பதறின? இந்தியப் பங்குச்சந்தையில் தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் விலை ஏன் வீழ்ச்சிஅடைந்தன ?
அதை பற்றி தெரிந்து கொள்ளும் முன் எச்1.பி.விசா என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
எச்1.பி. விசா என்பது வெளிநாடுகளில் இருந்து வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படுவது. அதாவது அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் கிளை நிறுவனங்கள் அமைத்து செயல்படும்போது, இங்கிருக்கும் பணியாளர்களை அந்த நாட்டுக்கு வேலைக்கு தற்காலிகமாக அனுப்பும் போது வழங்கப்படுவது எச்1பிவிசா ஆகும். இந்த விசாவுக்காக கடந்த ஆண்டு இந்தியர்கள் 2.60 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன விதமான மாற்றங்கள் எச்1.பி விசாவில் செய்யப்பட இருக்கிறது தெரியுமா?
கடந்த 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எச்.1 பி விசா சட்டத்தின் படி, எச்1.பி விசா பெறும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம், ரூ.4.50 லட்சம்(60 ஆயிரம்டாலர்) இருக்க வேண்டும். ஆதலால் இந்த ஊதியத்தின் அடிப்படையில், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களையும், சீனர்களையும் அதிகமாக வேலைக்கு எடுத்துவந்தன. இதனால், அமெரிக்கா மக்களுக்கு வேலைவாய்ப்பு படிப்படியாக குறையத் தொடங்கி அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து, எச்.1 பி விசா சட்டத்தில் குறைந்த பட்ச ஊதிய அளவையும், விசா பெறும் நடைமுறையும் டிரம்ப் அரசு மாற்ற திட்டமிட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஜியோ லோப்ரகன் என்ற எம்.பி. “உயர் திறன் மற்றும் நியாயச்சட்டம் 2017” என்ற தலைப்பில் எச்1பி விசா சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவின் படி
- எச்1பி விசா பெறுபவரின் குறைந்தபட்ச ஊதியம் இரு மடங்கு அதிகரிக்கப்படும். 60 ஆயிரம் டாலர் என்ற அளவு 1.30 ஆயிரம் டாலர்களாக(ரூ.9 லட்சம்)அதிகரிக்கப்படுகிறது. அதாவது, இனி குறைந்த பட்சம்ரூ. 9லட்சம் அல்லது அதற்கு மேல் ஊதியம் பெருபவர்களுக்கே எச்1.பிவிசா வழங்கப்படும்.அதற்கு குறைவா ஊதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படாது.
- அமெரி்க்காவில் உள்ள சிறிய நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களக்கு எச்.1. பி விசாவில் 20 சதவீதத்தை வழங்கவேண்டும். அப்போதுதான் அவை பெரு நிறுவனங்களுடன் போட்டியிட்டு வளர முடியும்.
- ஒவ்வொரு நாட்டுக்கும் எச்1.பி விசா குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கவேண்டும் என அளவு, சலுகை நீக்கப்படும். இதில் அதிகமாக ஆதாயம்அடைந்தது இந்தியா. அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் இந்த திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
- எச்1 பி விசா பெறும் நிறுவனங்களும், ஊழியர்களும், முதலில் அமெரிக்க ஊழியர்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம்.
- கணினி லாட்டரி முறையில் எச்.1.பி விசா கொடுப்பதைக் காட்டிலும், அமெரிக்காவுக்கு கல்வி பயில வருபவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பணியாளர்களை வரவழைத்து இங்கு நன்கு பயிற்சி அளித்து, அவர்களை மீண்டும் அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்பும் முறையை தடை செய்ய வேண்டும்.
- எச்.1.பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்கள் மனைவியும் இங்கு பணியாற்றுவதை தடைசெய்ய வேண்டும்.
- ஒரு நிறுவனத்தில் 50 ஊழியர்கள் இருக்கும் நிலையில், அதில் பாதிஊழியர்கள் எச்1பி விசா, எல்1 விசா மூலம் பணியாற்றுபவர்களாக இருந்தால், கூடுதலாக எச்1பி விசா வழங்குவதை தடைசெய்யவேண்டும்.
இந்தியாவை எந்த எச்1.பி விசா மாற்றம் எப்படி பாதிக்கும்?
எச்1பி விசா மூலம் அதிகம் பயன் அடைபவர்கள் இந்தியர்களும், அதைத் தொடர்ந்து சீனர்களும்தான். அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் கடந்த 2014ம்ஆண்டில் வழங்கப்பட்ட எச்1பி விசாவில் 70 சதவீதம் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அமெரிக்கா சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களி்ல 86 சதவீதம் பேர் எச்.1பி விசா பெற்றுதான் பணியாற்றி வருகின்றனர்.
இப்போது குறைந்த பட்ச ஊதிய அளவை சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றி அமைக்கும் போது, அமெரிக்க நிறுவனங்கள் தற்போது பணிக்கு வைத்து இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும்.
1.30 லட்சம் டாலர் (ரூ.9லட்சம்) இந்தியர் ஒருவருக்கு சம்பளம் கொடுத்து, அவருக்கு டிக்கெட், பயிற்சி, உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுத்து பணியாற்ற வைப்பதைக் காட்டிலும், உள்ளூர் அமெரிக்கர்களையே வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனமுடிவுக்கு வரும். இதனால், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மூட்டை முடிசு்சுகளுடன் இந்தியாவுக்கு திரும்ப வேண்டியது இருக்கும்.
இதனால், இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உடன் அங்குள்ள இந்தியர்கள், உள்ளிட்டபிற நாட்டவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்..
இந்த மசோதா தாக்கலால், வெளிப்பணி ஒப்படைப்பு பணி செய்து வரும் இன்போசிஸ், டி.சி.எஸ். விப்ரோ, எச்.சி.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த அச்சத்தால், மும்பை பங்குச்சந்தையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக அடிவாங்கின. முதலீட்டாளர்களுக்கு ஏறக்குளைய ரூ.30 ஆயிரம் கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து டி.சி.எஸ். இன்போசிஸ் நிறுவனமும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளன
கருத்துரையிடுக Facebook Disqus