திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கலந்தபனை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ளது ஒரு பெட்டிக்கடை .இந்த கடையில் இருக்கும் 50 வயது மதிக்க தக்க பால்பாண்டி பெரியவர் வருகிறவர்களிடம் அன்புடன் பேசி தாகத்துக்கு மோர் குடிங்க என்று பெரிய கிளாசில் மோர் ஊற்றி கொடுக்கிறார் .
மோர் 10 ரூபாய் இருக்கும் என்று நினைத்து 10 ரூபாயை எடுத்து கொடுத்தால் ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள் என்று கூறுவது வியக்கவைக்கிறது .சிலர் சில்லறை இல்ல என்று சொன்னால் சரி இருக்கட்டும் பிறகு வரும் போது கொடுங்கள் என்று கூறி விடுகிறார் .
ஐயா இப்படி கொடுத்தால் உங்களுக்கு கட்டுபடியாகாதே என்று கேட்டதற்க்கு ஐயா தாகத்துக்கு மோர் குடிக்குறாங்க இதிலே போய்...
சும்மா கொடுத்தா மதிப்பு இருக்காது அதான் ஒரு ரூபாய் பணம் வாங்குகிறேன். அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார் .
பொன்னை விரும்பும் பூமிலே மனுசனை விரும்பும் பால்பாண்டி பெரியவர்க்கு வாழ்த்துக்கள்..!
கருத்துரையிடுக Facebook Disqus