0
 Related image
தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் செயல்படவில்லை.

அதை சரி செய்ய பல வல்லுனர்களை அழைத்தார்கள்.. ஆனால் யாராலும் அந்த இயந்திரத்தை  செயல்ப் பட வைக்க முடியவில்லை.

கடைசியாக வயதான ஒருவரை அழைத்தனர். அவர் சிறு வயதிலிருந்தே இயந்திரங்களை கையாழ்வதில் தேர்ச்சிப் பெற்றவர். மிகவும் அனுபவசாலி. 

அவர் வரும்போதே ஒரு பெரிய மூட்டை நிறைய கருவிகளை கொண்டு வந்தார். வந்தடைந்த  அடுத்த கணமே  வேலையை ஆரம்பித்தார். அந்த இயந்திரத்தை கவனமாக பரிசோதித்தார். 

அந்த நிறுவனத்தின் இரண்டு உரிமையாளர்களுமே இவரை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர். இதை எப்படியாவது சரி செய்து விடுவார் என்று நம்பிக்கையோடு இருந்தனர்.  

அந்த முதியவர் ஆழ்ந்த பரிசோதனைக்கு பிறகு, அவர் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு சின்ன சுத்தியை எடுத்தார். இயந்திரத்தை லேசாக தட்டினார். சடாரென்று இயந்திரம் உயிர் பெற்றது. இந்த சம்பவத்தை கண்ட அனைவரும் ஆனந்தத்தில் கத்தி ஆரவாரமாக கொண்டாடினர். அந்த வயதானவர் சத்தமில்லாமல் அந்த சுத்தியை மூட்டைக்குள்  மற்ற கருவிகளுடன் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். 

ஒரு வாரம் கழித்து அந்த உரிமையாளர்களுக்கு, பெரியவரிடமிருந்து 1 லட்சம்   ரூபாய்க்கான பில் வந்தது. அதை கண்டு வியந்து விட்டனர். 'அந்த கிழவன் ஒன்றுமே செய்ய வில்லையே..! ஏன் விலை இவ்வளவு உயர்வாக போட்டிருக்கிறார்..' என்று அந்த பெரியவருக்கு விளக்கம் கேட்டு 'நீங்கள் என்ன செய்தீர்கள் என்று 1 லட்சம் போட்டிருக்கிறீர்கள்.. மசோதாவை விரிவு படுத்தி அனுப்பவும்..' என்று ஒரு மடல் அனுப்பினர். 

பெரியவர் அவர்கள் கேட்டது போல் மசோதாவை விரிவு படுத்தி அனுப்பினார் :
'சுத்தியை வைத்து தட்டினதற்கு : Rs 2/-...

எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்று தெரிந்ததற்கு : Rs 99,998 /-..'

கதை நீதி : முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!

கருத்துரையிடுக Disqus

 
Top