0
Image result for திதி
1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ?

2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ?

3.முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ?

4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?
Related image


நம்முடைய சமய நூலில் குறிப்பாக கருட புராணம் என்னும் நூலில் இதை பற்றி தெளிவாக சொல்லபட்டு இருக்கிறது. விண்ணில் உள்ள சூரியன் பூமியில் உள்ள குளத்து நீரில் தெரியும் , இதை போல 3 குவளையில் நீர் ஊற்றி வெளியில் வைத்தால் எல்லா குவளையிலும் சூரிய ஒளி தென்படும் ,
இது போல ஒரு ஆண்மகனின் ஆன்மாவில் உண்டான ஒன்று மேற்பட்ட ஆன்மாகளும் தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .


 Related image
இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும்,
 
அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் தரவேண்டும் ......(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும் )

Image result for திதி

பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் பெண்கள் திதி தரவேண்டும் ,பிறகு வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .

தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும், அவர் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும், தந்தை இறந்த பிறகு இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

தாய்க்கு தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது, தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு ,மறுமுறை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் ,தனியாக படையல் பூசை போடலாம் என்று நூல்கள் சொல்கிறது .....

திதி வேறு படையல் பூசை வேறு குழப்ப வேண்டாம் ....

திதிகள் கொடுப்பது நம் வம்சத்தினருக்கு ஆரோக்கியம் ,நல்ல வாழ்க்கை ,மேலும் பல பிரச்சனைகளில் நமக்கு விலக்கு அளித்து விடும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top