0
 Image result for top speed wifi test
அட அதெல்லாம் ஸ்பீடா... இது... இது ஸ்பீடு என்று இணைய இணைப்பின் வேகத்தை விட 100 மடங்கு அதிக விரைவான வேகம் கொண்ட வைபை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இணைய இணைப்பின் வேகத்தை 100 மடங்கு விரைவாக்கும் அகச்சிவப்பு கதிர்கள் அடிப்படையிலான வைபை முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது ஒரு வினாடிக்கு 100 எம்.பி. என்ற

வேகம் தான் தற்போது இணையதளத்தின் அதிகபட்ச வேகமாக பார்க்கப்படுகிறது.

சில இடங்களில் வைபை இணைப்பு முழுவதும் கிடைக்காமல் பலரும் எரிச்சல் அடைவது உண்டு. ஆனால் நெதர்லாந்தின் ஈந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினாடிக்கு 40 ஜி.பி. வேகத்தில் இயங்கக் கூடிய அகச்சிவப்பு கதிர்கள் அடிப்படையிலான வைபை அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இதை சோதனை செய்து பார்த்த போது 2.5 மீட்டர் தொலைவிலும் வினாடிக்கு 42 ஜி.பி,. என்ற வேகத்தில் இயங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை பல்வேறு மின்சாதனங்களிலும் பொருத்தி எளிதில் இணைய சேவைகளை நெருக்கடியின்றி விரைவாக பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் அகச்சிவப்பு கதிர்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் உறுதி கூறியுள்ளதால் விரைவில் இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று

தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துரையிடுக Disqus

 
Top