இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழை நீர்இன்று (28/01/2017)!!
கல்லலில் பெய்த மழையில் கல்லல் சோலைவனம் இளைஞர் அணியினரால் தூர்வாரப்பட்ட அனைத்து கால்வாயிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இளைஞர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் மிகப்பெரிய மகிழ்ச்சி..
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் சேர்ந்த இளைஞர் சமுதாயம் மீண்டும் மக்கள் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, வரத்துக் கால்வாய்களை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமன்றி வெளியூர்களில் வசிக்கும் கல்லல் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் இதில் உறுப்பினராக சேர்ந்தனர். தற்போது கல்லல் பகுதியில் உள்ள வரத்துக்கால்வாய் அனைத்தையும் சோலைவனம் இளைஞர் அணியினர் துார்வாரி சுத்தம் செய்து வருகின்றனர். எல்லா தேவைக்கும் அரசை நம்பியதால் தான், நம் வேலையை கூட நம்மால் செய்ய முடியவில்லை.
முதற்படியாக ஊரில் உள்ள கண்மாய்க்கு வரும் வரத்து கடந்த 20 நாளில் துார்வாரி சீரமைத்துள்ளோம்.
இந்த பணம் கல்லல் இளைஞர்கள் மனமுவந்து அளித்தது. இதன் நோக்கம் ஊரை விட்டு சென்றவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
நாங்கள் துார்வாரிய வரத்துக்கால்வாய் எல்லாம் கடந்த 25 முதல் 50 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்தவை. அடுத்ததாக ஊரை சுற்றிலும் மரக்கன்று நடுதல், பால்பண்ணை வைத்து ஊரில் வேலை வாய்ப்பு கொடுத்தல் என்பது தான்..
கருத்துரையிடுக Facebook Disqus