உங்களின்
மிக வேகமாக உலாவலுக்கும் மற்றும் பதிவிறக்கத்திற்கும் உதவும் இரண்டு
வகையாக டின்என்எஸ் ஹேக் முறைகளை இங்கு வழங்கவுள்ளோம். பின்வரும் எளிமையான
வழிமுறைகள் உங்கள் இணைய வேகத்தை 20 முதல் 30% அதிகரிக்க அனுமதிக்கின்றன,
உடன் இது முற்றிலும் வேலை செய்யும் ஒரு முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள்
இயல்புநிலை டிஎன்எஸ் (DNS)-ஐ Gகூகுள் டிஎன்எஸ்-க்கு மாற்றியமைப்பதன் மூலம்
நீங்கள் ஒரு தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாவிட்டாலும், உங்களுக்கான இணைய வேக
மாற்றத்தை எளிதாக்கும் வண்ணம் படி படிப்படியாக இங்கு தொகுக்கப்பட்டுள்ள
வழிகாட்டி உங்களுக்கு நிச்சயம் உதவும்.
டொமைன்
பெயர் சேவையகம் அதாவது டொமைன் நேம் சர்வீஸ் என்று அர்த்தப்படும். இந்த
ப்ரோட்டோகால் ஆனது ஐபி விலாசத்தை டொமைன் முகவரியாக மாற்றியமைக்கும்
மற்றும் அதற்கு நேர்மாறாகவும் மாற்றும். ஒரு நெறிமுறையாகும்.
உங்களுக்குப்
பிடித்த தளத்தின் பெயருக்கு பதிலாக அதன் ஒவ்வொரு சரியான இலக்கங்களையும்
நினைவில் வைத்துக்கொண்டதாக நினைத்துக்கொள்ளுங்களேன். அப்படியாக இந்த
டிஎன்எஸ் ஆனது இலக்கங்களை மனித ரீதியாக வாசிக்கக்கூடிய அகரவரிசை மொழிகளாக
மொழிபெயர்க்கிறது. ஒவ்வொரு முறையும் 'யூட்யூப்' நீங்கள் என்று யூஆர்எல்
முகவரிப் பட்டியில் தட்டச்சு செய்யும் போது பின்தளத்தில், அந்த
குறிப்பிட்ட தளத்தில் நீங்கள் இணைக்ப்படும் நோக்கத்தில் யூட்யூப்-க்கான
பொருத்தமான ஐபி முகவரியை டிஎன்எஸ் பெறுகிறது.
சில
நேரங்களில் உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்கும் அல்லது குறைக்கும் வேலையை
உங்களின் இணைய சேவை வழங்குநர் (ISP) மட்டுமே முழுமையாக கவனிப்பது இல்லை.
இந்த இடத்தில உங்களின் டிஎன்எஸ் சேவையானது மாற்றப்பட வேண்டும் என்று
அர்த்தம்.
அப்படியாக,
உங்கள் ஐஎஸ்பி மூலம் உங்கள் இயல்புநிலை டிஎன்எஸ்-ஐ மாற்றியமைப்பது எப்படி
என்பதை பற்றிய எளிமையான விளக்கப்படங்களுடனான வழிமுறைகளை தான் இங்கு
தொகுத்துள்ளோம். இது நிச்சயமாக உங்களின் இணையத்தின் வேகத்தை
மேம்படுத்துவதற்கு உதவும்.
வாடிக்கையாளர்கள்
(லேப்டாப் / கம்ப்யூட்டர் பயனர்கள்) தங்கள் இலவச டிஎன்எஸ் சேவையுடன்
மகிழ்ச்சியாக இல்லாத பட்சத்தில் இலவச டிஎன்எஸ் சேவைகள் கிடைக்கும்.
அப்படியான மிகவும் பிரபலமான மாற்று இலவச டிஎன்எஸ் சேவைகளில் - ஓப்பன்
டிஎன்எஸ் (OpenDNS) ஒன்றாகும். இந்த இலவச ஓப்பன் டிஎன்எஸ்-ஐ என்கேஜ் செய்ய
கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
கண்ட்ரோல் பேனல் > நெட்வொர்க் அண்ட் இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் என்பதுள் நுழையவும்
இப்போது 'சேன்ஜ் அடாப்டர் செட்டிங்ஸ்' என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
இப்போது
உங்கள் திரையின் இடது பக்கத்தில் சூஸ் > இன்டர்நெட் ப்ரோட்டோகால்
வெர்ஷன் 4 (டிசிபி / ஐபிவி4) [Choose > Internet Protocol Version 4
(TCP/IPv4)] தேர்வு செய்யவும் மற்றும் ப்ராபர்டீஸ் சென்று சூஸ் > யூஸ்
பாலோயிங் டிஎன்எஸ் சர்வீஸ் அட்ரெஸ்ஸஸ் [Properties > Use Following DNS
Server Addresses] என்பதை தேர்வு செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை
குறிப்பிட்ட டாப்களில் டைப் செய்யவும்.
*Preferred DNS server: 208.67.222.222
*Alternate DNS server: 208.67.220.220
கருத்துரையிடுக Facebook Disqus