0

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உப்புமா என்றாலே முகம் சுழிபார்கள். ஆனால், பிஸ்கட்டை பயன்படுத்தி செய்யும் இந்த உப்புமா அனைவரின் விருப்ப உணவாக இருக்கும் என்பது உறுதி.

தேவையான பொருட்கள்:

பிஸ்கட் - 6

பச்சை பட்டாணி - 2 ஸ்பூன்

காரட் - பாதி

பெரியவெங்காயம் - 1

தக்காளி - 1

கடுகு - 1 ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

சிகப்பு மிளகாய் - 2

உப்பு - சிறிதளவு

கொத்தமல்லி தழை - தேவையான அளவு

எண்ணெய் - 2 ஸ்பூன்

செய்முறை:

வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளிக்க வேண்டும். பின்பு நறுக்கிய காரட், பட்டாணி, வெங்காயம், தக்காளி போன்றவற்றையும் போட்டு சிறிது உப்பும் போட்டு வேக விடவும்.

அதன் பிறகு பிஸ்கட் துண்டுகளை புட்டு மாவு போல் விரவி வானலியில் போடவும். கடைசியில் கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும். சூடான பிஸ்கட்(ரொட்டி) உப்புமா ரெடி.

இதனை மாலை சிற்றுண்டியாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top