நீங்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வீடு மாறிவிட்டீர்கள்
என்றால் உடனே செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் ஒன்று வங்கி கணக்கை உங்களது
புதிய வீட்டின் அருகே உள்ள கிளைக்கு மாற்றுவது.
பணம் எடுப்பது, அல்லது டெபாசிட் செய்வதற்கு எந்த கிளையும் போதும் என்றாலும், லாக்கர் பெற, லோன் பெற, கிரெடிட் கார்ட் வசதி போன்ற சலுகைகள் பெற நாம் கணக்கு ஆரம்பித்த வங்கி கிளைக்கு தான் செல்ல வேண்டும். எனவே வங்கி கணக்கை ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்றுவது அவசியம். அதனை எப்படி மாற்றுவது என்பதையே இப்போது பார்க்கபோகிறோம்.
விண்ணப்பம்முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு விண்ணப்பம். வங்கி கணக்கு வைத்திருப்பவர் முதலில் வங்கி கிளையை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து புதிய கிளையிலோ அல்லது நாம் கணக்கு ஆரம்பித்த கிளையிலோ சம்பர்ப்பிக்க வேண்டும்.
நம்முடைய விண்ணப்பத்தில் நமது வங்கி கணக்கு எண், எந்த கிளைக்கு மாற்ற விரும்புகிறோம் என்ற விபரம் ஆகியவை இருக்க வேண்டும்.
செக் புக்கை சரண்டர் செய்ய வேண்டும்பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வங்கி கொடுத்த செக் புக்கை ஒப்படைத்துவிட வேண்டும். மேலும் புதிய முகவரி அடையாள சான்று, போன் எண் அல்லது மொபைல் எண் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்
எத்தனை நாள் ஆகும்?தேவையான டாக்குமெண்ட்களுடன் விண்ணப்பத்தை வங்கி கிளையில் அளித்துவிட்டால் நமது விண்ணப்பம் நாம் கணக்கு ஆரம்பித்த கிளைக்கு அனுப்பப்படும்.
அந்த கிளை நமது வங்கிக்கணக்கை முடித்துவிட்டு நமது கணக்கில் உள்ள தொகையை புதிய கிளைக்கு மாற்றம் செய்துவிடும்.
பணம் இடம்மாற்றம்புதிய கிளையில் புதிய வங்கி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அந்த பணம் டெபாசிட் செய்யப்படும். இந்த நடைமுறைக்கு 8 முதல் 10 நாள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கிளையில் கணக்கு தொடங்கப்பட்டவுடன் வாடிக்கையாளருக்கு புதிய வங்கி எண் மற்றும் புதிய செக் புக் வழங்கப்படும்
புதிய கிளையில் வங்கி கணக்கு எண் மாற்றப்பட்டவுடன் வங்கியின் வாடிக்கையாளர் எண் மாறாது. ஆனால் வங்கி கணக்கு எண் புதிய கிளையின்படி மாறிவிடும்.

கருத்துரையிடுக Facebook Disqus