*ஈசல் ஒரு நாள் உயிரி என்பது உண்மையில்லை. அவை உண்மையில் 15,20.ஆண்டுகள் உயிர்வாழும்.
இராணி கறையானுடைய வாரிசுகளே ஈசல். ஈசல்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வெளிவரும்.
அவைகளில் பெரும்பான்மையானவை கொன்றுண்ணிகளாலும், சத்து இல்லாமையாலும் இறந்துவிடுகின்றன.
இவைகளில் தப்பித்த ஒர சில ஈசல்கள் வெற்றிகரமாக மண்ணிற்குள் நுழைந்தவிடுகின்றன. இனி அது புற்றை கட்ட ஆரம்பிக்கும்.
*ராணி கறையான் பிரத்தியேகமாக இடும் முட்டைகளிலிருந்து வெளிவருபவையே ஈசல்கள்.அவை புற்றை விட்டு வெளியேறி புதிய புற்றுகளை உருவாக்கும்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஈசல்கள் வெளியேறினாலும் அவை அனைத்து புற்றை உருவாக்க முடிவதில்லை.
*இராணிக் கறையான் ஒரு நாளைக்கு சுமார் 2000 முட்டைகள்வைக்கும். அதாவது, ஒவ்வொரு 15 நொடிக்கும், ஒரு முட்டைவைக்கும். இராணிக்கறையான்களின் வாழ்நாள் 15-25 ஆண்டுகள் ஆகும்.
*நிலத்திற்கு மேலே கறையான் புற்று எந்த அளவில் உள்ளதோ அதே அளவிற்கு பூமிக்கு கிழேயும் இருக்கும்.
*ஈசலுக்கு உணவு மண்டலம் கிடையாது. வயிறு பகுதி முழுதும் கொழுப்பும் புரதமும் நிரம்பி இருக்கும். இணை சேர்ந்து முட்டை இட்டு முட்டை பொரிந்து செல்கள் வந்து இரை தேடும்வரை ஈசல்கள் உயிர் வாழ உடலில் உள்ள கொழுப்பும் புரதமும் உதவி புரிகிறது. அவை தீர்ந்தபின் உணவு மண்டலமும் செரிமான மண்டலமும் உருவாகக்கூடும்(ஆராயச்சிக்குரியது)
*ஒரு கறையான் கூட்டத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட இராணிகள் இருக்கும். அவைகளும் முட்டைகள் இடும். முதன்மை இராணி இறந்தால், மற்ற இராணிகள் அதன் பணிகளைத் தொடர்ந்து செய்யும்.
*பணிக்கரையான்கள் தங்கள் உமிழ்நீரையும், மண்ணையும் கலந்து புற்றினைக் கட்ட ஆரம்பிக்கும்.
கருத்துரையிடுக Facebook Disqus