சாலை
பேருந்து விபத்து ஒன்றில் 30 பேர் உயிரழப்புகள் மற்றும் காயங்கள்
ஏதுமின்றி தப்பித்த காரணத்தை பிரபல செய்தி சேனல் ஒன்று வீடியோ ஆதாரங்களுடன்
தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளது.
இம்மாதம் முதல் வாரத்தில் சீனாவில் நடைபெற்ற சாலை விபத்து ஒன்று, அங்குள்ள அனைத்து ஊடகங்கள் மத்தியிலும் பரப்பரப்பாக பேசப்பட்டது.
சீனாவில்
ச்ஷோஜோன் நகர நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து ஒன்று,பெரும்
சாலை விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த 30 பேரில் ஒருவருக்கு மட்டும்
சிறு காயங்கள் ஏற்பட்டு, மற்ற அனைவரும் பத்திரமாக் உயிர்பிழைத்தனர்.
பெரும் விபத்து ஒன்றில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது எப்படி என அங்குள்ள ஊடகங்கள் மத்தியில் பரபரப்பான பேசுபொருளானது.
இதற்கான
காரணத்தை பல்வேறு ஊடகங்கள் தேடிக்கொண்டிருக்க, பிரபல ரஷ்யா டுடே செய்தி
சேனல், சீனாவின் ச்ஷோஜோன் நகரில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து, அதில்
கிடைக்கப்பெற்ற பேருந்தின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளது.
அதில்
வேகமாக சென்று கொண்டு இருக்கும் பேருந்தின் வழியின் எதிரே கார் ஒன்று
குறுக்கிடுகிறது. தீடீரென வரும் காரால் பதற்றம் அடையும் ஓட்டுநர் பேருந்தை
வலது பக்கமாக திருப்ப முயல்கிறார்.
ஓட்டுநரின்
சாதுர்யத்தாலும், பயணிகள் தங்களின் பாதுகாப்பின் மீது வைத்திருக்கும்
நடவடிக்கைகளாலும் ஒரு பெரும் விபத்து நடக்காமல் தடுக்கப்பட்டு இருக்கிறது.
பரபரப்பான
சாலை ஒன்றில் நடைபெற்ற இந்த அமளி துமளி பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு
வந்த ச்ஷோஜோன் நகர போலீசார், விசாரணை நடத்திய பின்னர் பயணிகளின் பாதுகாப்பை
உறுதிசெய்தனர்.
கருத்துரையிடுக Facebook Disqus