பச்சைப்பட்டாணி - 250 கிராம்
(அல்லது) காய்ந்த பட்டாணி - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2 அல்லது 3
உருளைக்கிழங்கு - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - 2
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்த்தூள் - 1 அல்லது 1.5 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை கொத்தமல்லித்தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கி மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும்.
அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் விழுதை ஊற்றவும்.
பின்னர் இஞ்சி விழுது சேர்க்கவும். தீயை மெதுவாக வைத்து கிளறி விடவும்.
சிறிது கொதித்ததும் பட்டாணி மற்றும் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்க்கவும்.
பின்னர் சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி, வெயிட் போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குக்கர் சூடு தணிந்ததும் திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும். பொடியாக நறுக்கின கொத்தமல்லியை மேலே தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, பூரி, நாண் போன்ற வகைகளுக்கு சூப்பர் சைடு டிஷ்.
கருத்துரையிடுக Facebook Disqus