0
மழையை சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100 மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200 மிமீ (8 அங்குலம் உலோகம்) அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0 மிமீ முதல் 25 மிமீ (0.98 அங்குலம் வரை) அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கப்பட்டிருக்க. உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படுகிறது.


அளவிடல் முறை

பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேகத்திற்கும் மழை அளவிடப்படுகிறது. எனவே மழையை அளவிடுமுன் நேரத்தைக் குறிப்பிடுவது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லி லீட்டர் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். நீர் ஒரு திரவமாக உள்ளது மில்லி லீட்டர்என்ற அளவை விட லீட்டர் என அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவை SI அலகு மில்லி லீட்டர் உள்ளது.

Related image

"ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்."

எனவே, 10 மிமீ மழை என்று பதிவானால், அது 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துக்கொள்வும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பின்தங்கியுள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174 x 10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில் 1 மிமீ மழை 17,40,00,000 லீட்டர்மழை பெய்தாகக்கொள்ளலாம்

கருத்துரையிடுக Disqus

 
Top