0
Image result for virtual news reader

ஒரு நாள் மனிதன் செய்யும் வேலைகளை இயந்திரமே செய்து முடிக்கும் அப்போது மனிதனுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை சீனா நாடு நிஜமாக்கியுள்ளது.

சீனாவை சேர்ந்த தொலைக்காட்சி புதிய வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ அரிவிப்பில் காட்டப்பட்ட விஷயம்த்தை பார்த்து உலகமே பிரமித்து போனது. உலகிலேயே முதன்முறையாக முழுநேரமும் வர்ச்சுவல் மனிதன் செய்தி வாசிப்பாளராக பணிப்புரிவார் என்று கூறப்பட்டது. இந்த வீடியோவில் வந்த அறிவிப்பை அந்த இயந்திர மனிதனே படித்து காண்பித்தது இன்னும் ஆச்சரியம்.

இயந்திர செய்தி வாசிப்பாளர் என்றால் என்ன?
Image result for virtual news reader

எஸ்.ஜே சூர்யா கூறுவது போல் தான் இதுவும். 'இருக்கு ஆனால் இல்லை'. மாயமாக தோன்றும் நிஜம் தான் இந்த தொழில்நுட்பத்தின் அம்சமே. கணினி மூலம் ஒரு நபரின் உடல் எடை, உயரம், தோற்றம் மற்றும் குரல் என அனைத்தையும் அப்லோட் செய்வார்கள். பின்பு அப்படி இணைக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் ஒன்று திரட்டி, அதே நபரை கம்யூட்டரில் உருவாக்குவார்கள்.


ஒரே நேரத்தில் 1000 ரோபோக்கள் நடனமா? வியக்க வைக்கும் கின்னஸ் சாதனை அதற்கென்று தனித்துவமாக இருக்கும் தொழில்நுட்பம் கொண்டு, அந்த இயந்திர மனிதன் படிக்க வேண்டிய செய்திகளை டைப் செய்து இணைத்திடுவார்கள். பின்னர் எவ்வித சிரமும் இல்லாமல் பிராம்டர் எனக் கூறப்படும் டிவி போன்ற கணினியை பார்த்து தானாகவே படித்துக் கொள்ளும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டெக்னிக்கை பயன்படுத்தி தான் சீனாவின் முதல் இயந்திர செய்தி வாசிப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனா நாட்டின் முதல் இயந்திர செய்தி வாசிப்பாளர் இந்த எந்திர செய்தித் தொகுப்பாளர், ஆங்கிலம் மற்றும் சீன மொழி என்று இரண்டு மொழியிலும் செய்திகளை மிகத் துல்லியமாக வாசித்துத் தொகுத்து வழங்குகிறது.

சின்ஹுவா (Xinhua) என்னும் ஊடக நிறுவனம் மற்றும் மென்பொருள் நிறுவனமான சோகோவ் (Sogou) நிறுவனம் ஒன்றாக இணைந்து, வ்யூஜென்-ல் (Wuzhen) நடைபெற்ற உலக இணைய மாநாடு விழாவில் இந்தப் புதிய எந்திர செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

இந்த இயந்திர மனிதன் பார்ப்பதற்கு நிஜ மனிதன் போன்ற தோற்றத்துடன் இருப்பது அனைவரையும் வியக்க வைத்தது. அதுமட்டுமல்ல, நிஜமான செய்தி வாசிப்பாளர்கள் எப்படி செய்திகளை வாசிப்பார்களோ அப்படியே அதே பாவனையிலேயே செய்திகளை வாசித்துத் தொகுத்து வழங்குகிறது. மேலும், இது இடைவேளை இன்றி 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் செய்திகளைத் தொகுத்து வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சின்ஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சின்ஹுவா நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் ஒருவரின், உருவம் மற்றும் அவரின் குரல் வளம் தான் இந்த எந்திர செய்தித் தொகுப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன எந்திர செய்தித் தொகுப்பாளர் தானாகவே ஊடகத்திலிருந்து செய்திகளை எடுத்து வாசிக்கும் வல்லமை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, திரையில் வரும் எழுத்துக்களை மனிதர்களைப் போலவே பார்த்து, அவற்றைப் பிழை இல்லாமல் படித்து செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது.


உலகம் இயந்திர மையமாக மாறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top