0
Image result for Watrix gait recognition
பெரும்பாலான நேரங்களில், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கண்டு நாம் அள்ளி நகையாடுவது உண்டு. ஆனால் சில சமயங்களில் சீன தயாரிப்புகளை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை நாம் ஒற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்கிற கட்டாயமும் உருவாகும். அப்படியான ஒரு கட்டாயத்தில் தான் நாம் இருக்கிறோம்.

பெரிதாக ஒன்றுமில்லை சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய பகுதிகளில் ஒரு புதிய கண்காணிப்பு மென்பொருள் (சர்வலைன்ஸ் சாப்ட்வேர்) நிறுவப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியமும் பெருமிதமும் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? - இருக்கிறது.

நடைமுறைக்கு வந்துள்ள சீனாவின் புதிய கண்காணிப்பு சாப்டவேர் ஆனது சாதாரண கண்காணிப்புகளை போல் இன்றி குறிப்பிட்ட நபரின் (பெரும்பாலும் குற்றவாளிகள்) நடையை வைத்தே அவரைகளை அடையாளம் காட்டும் படி உருவாக்கம் பெற்றுள்ளது. அதாவது குற்றவாளிகள் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை பார்த்து, சுதாரித்து கொண்டு, முகத்தை மறைத்துக் கொண்டு நடந்தாலும் கூட அவரகள் சிக்கி கொள்வார்கள் என்று அர்த்தம்.


இந்த அற்புதமான தொழில்நுட்பத்திற்கு பின்னால் இருக்கும் வாட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூற்றின்படி, இந்த முகம் அடையாளம் காணும் மென்பொருள் ஆனது பலவகையான அடையாளம் காணும் சிக்கல்களைச் சரிசெய்ய உதவும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த மென்பொருள் எப்படி வேலை செய்கிறது?
முதலில் இந்த மென்பொருள் ஆனது, கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு வில் ஒரு நபரின் நிழற்படம் மற்றும் அவரின் நடை பாணியின் டிஜிட்டல் மாதிரியை எடுக்கும். பின் அதனை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட நபரின் நடை பாணி மற்றும் நிலைப்பாட்டின் 3டி மாதிரியை உருவாக்கும்.

இன்ச் விடாமல் கண்காணிக்கும்!


இறுதியாக எடுத்து வைக்கும் அடிகளின் நீளம், நடக்கும் போது இரண்டு கால்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தூரம், நாடாகும் வேகம், மாறும் அடிப்படை, முன்னேற்றக் கோடு, கால் கோணம், இடுப்பின் கோணம் மற்றும் அமர்ந்து எழும் செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட நபரை அடையாளம் காட்டும்.

94 சதவிகிதம் துல்லியமாக வேலை செய்கிறது!
பரிசோதனையின் போது, இந்த மென்பொருள் அந் ஒரு மணிநேர கண்காணிப்பு வை சுமார் 10 நிமிடங்களில் கண்காணித்து முடித்தது என்பதையும், இந்த மென்பொருள் ஆனது சுமார் 50 மீட்டர் (165 அடி) தூரத்திலிருந்து கூட குறிப்பிட்ட நபரின் நடையை அடையாளம் கண்டு கொள்ளும் என்பதும், எல்லாவற்றிர்க்கும் மேலாக இந்த மென்பொருள் ஆனது 94 சதவிகிதம் துல்லியமாக வேலை செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மென்பொருளை ஏமாற்ற முடியுமா?
இனி அடையாளம் காண்பதற்கு மக்களின் உதவி தேவைப்படாது என்று பெருமைப்பட்டு கொண்ட வாட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹுவாங்கிடம், இந்த மென்பொருளை ஏமாற்ற முடியுமா? அதாவது கண்காணிப்பு கேமராவின் முன்னால் வேறு மாதிரியாக நடப்பதினால் இதனை ஏமாற்ற முடியுமா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.

ஏமாற்ற முடியாது, எப்படி?
போலியான பகுப்பாய்வுகள் மூலம் இந்த மென்பொருளை ஏமாற்ற முடியாதாம். ஏனெனில், இந்த மென்பொருள் ஆனது வெறுமனே நடையை மட்டும் அல்ல, முழு உடலையும் கண்காணிக்கும்" என்கிறார் ஹூவாங். ஆக மொத்தம் ஒரு வேட்டைக்காரன் ஒரு கணினியின் வாயிலாக வேட்டையாடப்படுமளவிற்கு இந்த மென்பொருள் பலமானது என்கிறது ஆசியா டைம்ஸ்.

குரல் மாதிரிகளையும் சேகரித்து வருகிறது!
இந்த புதிய மென்பொருளின் அறிமுகம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் சீனா தன் குடிமக்களிடமிருந்து குரல் மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. அந்த சேகரிப்பின் வாயிலாக தன் மக்கள் பேசும் ஒளியின் மூலமாக அடையாளம் காண முடியும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனாவின் கிழக்கு ஆசியாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் இருந்து சுமார் 70,000 குரல் மாதிரிகளை சீன காவல்துறை சேகரித்து உள்ளது.

தொலைந்துபோனவ்ரகள் மற்றும் தெருவில் வீழ்ந்த வயதானவர்கள்!
முக அடையாள அங்கீகாரத்தோடு ஒப்பிடும் போது குரல் அங்கீகாரம் என்பது மிகவும் சிறியது. ஏனெனில் சீன காவல் துறையானது சுமார் ஒரு பில்லியன் முகங்களை பதிவு செய்து வைத்து உள்ளதாக கருதப்படுகிறது. இதுபோன்ற அடையாளம் காணும் தொழில்நுட்ப வளர்ச்சியானது குற்றவாளிகளை மட்டுமின்றி, தொலைந்துபோனவ்ரகள் மற்றும் தெருவில் வீழ்ந்த வயதானவர்கள் போன்றவர்களை கண்டுபிடிக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top