0
Image result for எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது
* தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

* வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது.

* பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

* மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.

* காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக் கூடாது.

* ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

* மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

* வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்க்க கூடாது.

* பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

* தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

* கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

* மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.

கருத்துரையிடுக Disqus

 
Top