0
How A Chennai Auto Driver Turned Into A Lifesaver For His ...

மெட்ராஸ் ஏர்போட்டைவிட்டு லக்கேஜ்உடன் வெளியேவந்து ஆட்டோபேசினேன் பெருங்களத்தூருக்கு...

காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைப்பாஸ் வழியே கின்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது.. 🚌  🚎  நான் சிதம்பரம் போகவேண்டும்..

ஆட்டோ.. _பெருங்களத்தூர் எவ்வளவுப்பா..?

என்றேன்  .500-ரூபாய் என்றான்..._

400-ரூபாய்க்கு வருவியா என்றேன்,.. சா....ர் கேட்டுப்பாருங்கசார்..
சரி சார் 450-ரூபாய் ஏறுங்க சார் என்றான்...

மெட்டாஸ்க்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது... தாம்பரம் தாண்டியது...

ஏம்பா தம்பி நீ இந்தவழியா சவாரிபோன எங்க காலை டிபன் சாப்பிடுவ...? என்றேன்... ரோட்டுக்கடைதான் சார் என்றான்..

அப்ப நீ சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்து டிபன் சாப்பிட்டு போவோம் என்றேன்...

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமர ஓரமா இருந்த தள்ளுவண்டிகிட்ட ஆட்டோ நின்றது..

ஒரு நடுத்தரவயது அம்மா.. நெற்றி நிறைய திருநீறு.. பொட்டு இல்லை...கழுத்தில் தாலி இல்லை ... வாங்க சார் என்றாள்.

இங்கதான் சார்.வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றான்....

இட்லி... வடை... பொங்கல்.. பூரி... மசாலா டீ.. என கட்டினோம்..
எவ்ளோம்மா என்றேன்..?
150-ரூபாய் சார் என்றாள் 200-ரூபாய் கொடுத்தேன்...

மீதி சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா... ஞாயிற்றுகிழமை ஆபீஸ், கடை, போக்டரி எல்லாம் லீவுனால வியாபாரம் இன்னிக்கு டல்சார் என்றாள்...

சரிம்மா 50-ரூபாய வச்சிக்க, நாளைக்கு இந்தபக்கமா வருவேன் வாங்கிக்கிறேன்.. என்றுகூறி புறப்பட்டோம்...

ஆட்டோக்காரர் கேட்டார்..! சார் நீங்க சிதம்பரம்போறிங்க.. நாளைக்குவருவேன்னு ,50-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க என்றான்..?

தம்பி இப்ப நாம சாப்பிட்டதை ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 500-ரூபாய் அப்புறம் டிப்ஸ், டாக்ஸ் என 600-ரூபாய் கொடுத்திருப்போம்...  இல்லையா....?

எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்தமாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் தம்பி.. என்றேன்.

சங்கம் அமைப்பது.. வசூல்செய்வது... அதன்மூலம் பொதுசேவை செய்வது.. புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது.. உண்டியல் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேடவேண்டும் என்பதில்லை..தம்பி நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்பா என்றேன்..

ஹைவேயில் ஓரம் மலை.. மரங்கள்... தெடர்ந்து வரும் ரயில்வே லைன்..  பயணிகள் பஸ்.. லாரி.. கார்... அத்துடன் இளங்காலைக் காற்று இதமானசவாரி கடந்து...

பெருங்களத்தூர் வந்தது.. 

இந்தாப்பா நீ கேட்ட 450-ரூபாய் என எடுத்துக்கொடுத்தேன்.._

400-ரூபாய் போதும் சார் என்றான்....!

ஏம்பா என்றேன்...?

அந்த 50-ரூபாய் உங்ககிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவிசெய்வீங்க சார், அதன்மூலம் எனக்கும் புண்ணியம் கிட்டட்டும்சார் என்றான்...!

நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு...!

கருத்துரையிடுக Disqus

 
Top