அமெரிக்காவின்
கண்களில் விரலை விட்டு ஆட்டிய நபர்களில் இவரும் ஒருவர் என்றால் அது
மிகையாகாது. ஐயம் தி ஹீரோ, ஐயம் தி வில்லன் என்பது போல், பலர் இவரை
சர்வாதிகாரி என்றும், அதே அளவிற்கு பலர் இவரை நல்லவர் என்றும் கூறினர்.
அவர் தான் சதாம் உசேன்.
சதாம் உசேன் மீது பேரன்பு கொண்ட
ஜாம்ஷெட்பூர் சேர்ந்த தாத்தா ஒருவர் தனது பேரனுக்கு சதான் உசேன் என பெயர்
வைத்தார். அது தான் இப்போது அவரது தலைவிதியை முற்றிலுமாக புரட்டிப் போட்டு
வாட்டி எடுக்கிறது...
படிப்பில்
படு சுட்டி சதாம் உசேன். எப்போதும் வகுப்பில் முதன்மை ரேங் வாங்கும்
மாணவரும் கூட. இவர் தனது மேற்படிப்பை தமிழகத்தில் பயின்றார். நுருல்
இஸ்லாம் பல்கலைகழகத்தில் மரைன் பொறியியல் படிப்பு படித்தவர். தனது
வகுப்பில் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார் சதாம்
உசேன்.
நல்ல
புத்திசாலி, நல்ல மார்க் வேறு எடுத்திருக்கிறார். கண்டிப்பாக கப்பல்
துறையில் சீக்கிரம் நல்ல வேலை கிடைத்து வாழ்வில் செட்டில் ஆகிவிடலாம் என
எண்ணி பல கனவுகளுடன் காத்திருந்தார் சதாம் உசேன். ஆனால், கனவுகள் எல்லாம்
தனது பெயரால் பகல் கனவாகும் என சதாம் எந்நாளும் நினைத்திருக்க மாட்டார்.
சீக்கிரம்
தனக்கு வேலை கிடைத்து விடும் என்ற சதாமின் எண்ணத்திற்கு மாறாக தொடர்ந்து
இவர் வேலை தேடி சென்ற இடத்தில் எல்லாம் காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இவருக்கு ஏதும் புலப்படவில்லை.
பிறகு
தான் வேலை தேடி சென்ற எச்.ஆர் துறையை சேர்ந்த நபர்களிடம் அழைத்து பேசிய
போதுதான், சதாம் உசேன் எனும் பெயர் தான் தனது வேலைக்கு தடையாக இருப்பதை
அறிந்து அதிர்ந்து போனார் சதாம் உசேன்.
சதாம்
உசேன் எனும் பெயரால் ஒன்றல்ல, இரண்டல்ல... ஏறத்தாழ நாற்பது நிறுவங்களில்
நிராகரிக்கப்பட்டுள்ளார் சதாம் உசேன். மரைன் இன்ஜினியரிங் என்பதால் பல
நாடுகள் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் சதாம் உசேன் எனும்
பெயர் கொஞ்சம் தடையாக இருக்கும் என்ற அச்சத்தால் நிறுவனங்கள் இவரை
நிராகரித்துள்ளன.
இது
தான் தடை என அறிந்த சதாம் உசேன் தனது பெயரை சாஜித் என மாற்றி கொடுக்க
பல்கலைகழகத்தை அணுகினார். ஆனால், அது உதவவில்லை. பிறகு சி.பி.எஸ்.இ
பள்ளியில் பயின்ற சதாம் அங்கே முயற்சித்தார். அவர்களும் உதவவில்லை.
இப்போது
ஜார்கண்ட் மாநில நீதிமன்ற படியை ஏறியுள்ளார் சதாம் உசேன். இதன்படி தனது
பள்ளி, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, பல்கலைகழக சான்றிதழ் போன்றவற்றில்
பெயர் மாற்றம் செய்து தர கோரியுள்ளார். இதற்கான் விசாரணை வரும் மே - 5ம்
தேதி தொடங்கவுள்ளது.
எண்ணற்ற
கனவுகள் கொண்டிருந்தும், புத்திசாலியாக இருந்தும் நினைத்த வேலை
கிடைக்கவில்லை என வேதனைக்குள்ளாகி யுள்ளார் சதாம் உசேன். பாலிவுட்
சூப்பர்ஸ்டார் ஷாருக்கானும் தன் பெயரால் சில நாடுகளில் உள்நுழைய தடைகளை
கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
His grandfather had lovingly given him his name, hoping that one day
he would grow up into a ‘positive’ human being. Some 25 years later, the
marine engineer from Jamshedpur in Jharkhand is despondent on being
forced to bear the burden of his name.
Two years after passing out
as a marine engineer from Tamil Nadu’s Noorul Islam University, Saddam
Hussain says he has failed to find a job because of his namesake: the
former Iraqi ruler executed in 2006. Saddam Hussein was a dictator
blamed for atrocities on his subjects until toppled by the US in 2003.
“People
are scared to hire me,” laments Jamshedpur’s Saddam. His job
application has been rejected each of the 40-odd times he has appeared
for interviews with multinational shipping companies. His batchmates
around the world have secured employment, but Saddam remains unemployed
despite ranking second in his batch of 2014.
For the initial six
months, Saddam was unable to decipher why he was being rejected. “I then
inquired with the HR departments of the companies and some of them told
me my name was the problem,” he recounts. He was told that having a
crew member with a name that arouses instant suspicion could be an
operational nightmare.
A top executive of Delhi-based TeamLease
Services, a leading recruitment consultant, agrees. “If the issue
involves crossing the borders, then nothing can be done as border patrol
and airport authorities are very process-driven and if there is a red
flag, they will check out. If the person’s job involves frequent travel
abroad, he might just keep getting stuck or the company has to pull him
out of the sticky situation, making the hire cumbersome,” he points out.
“Even Shah Rukh Khan gets detained at US airports. What is this Saddam in comparision?” he asks.
Getting rid of the name is proving to be a bigger nightmare.
Once
it hit him that his name was the impediment, Saddam legally got his
name changed into Sajid and procured all relevant documents, including
passport, voter ID and driving licence, under the name.
But his woes did not end there.
Prospective
employers ask for his educational certificates, but his university has
refused to change the name until he got his Class 10 and 12 exam
certificates changed first. He approached the Central Board of Secondary
Education (CBSE) for a name change, but the authorities have not acted
yet.
Driven to desperation, Saddam, now Sajid, moved the Jharkhand
high court with a plea to direct the CBSE to change his name. But since
unscrupulous people often abuse the system by frequently changing
names, the court acted with caution. Last week, it set the date for a
considered hearing on May 5.
Saddam remains fond of his
grandfather, though he feels he is paying for his folly. As one by one
his batchmates set sail after securing jobs, Saddam is left to spend
sleepless nights. “I am an innocent victim of somebody else’s crimes,”
he says