0
இது ஒரே மாதிரியான இரு
புகைப்படங்களை தேர்வு செய்து அதை எளிதில் நீக்க
பயன்படுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இது 600 கே.பி. அளவுதான்.

இதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் முதலில் உள்ள Method என்கின்ற டேப்
தேர்வாகி இருக்கும். அதில் இரண்டாவதாக உள்ள
Compare images between two datafiles என்கின்ற ரேடியோ
பட்டனை கிளிக் செய்யவும்.

அடுத்து Get Data என்கின்ற டேபை கிளிக் செய்யவும்.
அதில் முதல் போல்டரை தேர்வு செய்ய Build டேபை
கிளிக் செய்யவும். கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதிலிருந்து உங்கள் புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும்.
அடுத்த போல்டரை தேர்வு செய்யSecondary Data File-ல்
மீண்டும் முன்பு போலவே செய்யவும். அடுத்து
Find Dubs டேபை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


இரண்டு படங்களுக்குள் எத்தனை சதவீதம் சரியாக இருக்க
வேண்டும் என்பதை இந்த சாப்ட்வேருக்கு நாம் தெரிவிக்க
வேண்டும்.உதாரணத்திற்கு நாம் முதல் புகைப்படத்திற்கும்
அடுத்த புகைப்படத்திற்கும் 90 % to 100 % என தெரிவித்தால்
ஒரே மாதிரியாக இருக்கும் பிக்ஸல்கள் 90 சதவீததிற்கு
அதிகமிருந்தால் இந்த சாப்ட்வேர் நமக்கு சுட்டி காண்பிக்கும்.
எனவே உங்களது அளவை குறிப்பிடுங்கள்.அடுத்து இதில்
Setup என்கின்ற டேபை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு தேவையான விவரங்களை இதில் பூர்த்தி
செய்யுங்கள்.ஓ.கே. கொடுங்கள்.
அடுத்து உள்ள Find Dubs டேபை கிளிக் செய்யுங்கள்.
சிறிது நேரம் காத்திருந்தபின் உங்களுக்கு
கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதல் புகைப்படமும் இரண்டாவது புகைப்படமும்
தேர்வாகிஉள்ளதை காணலாம். இதில் எந்த புகைப்படம்
நமக்கு தேவையில்லையோ அதை டெலி்ட் செய்துவிடுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top