0
இந்த சாப்ட்வேர் 3 எம்.பி.தான்.ஆனால்
இதன் உபயோகம் அளவிட முடியாது.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் நாம் உபயோகித்தாலும்
அதில் உள்ள வசதிகளை நாம் தேடிதேடி பெறவேண்டும்.
பெரும்பாலும் யாருக்கு என்ன தேவையோ அதை
இந்த பிராசசரில் எளிதாக பெறலாம்.
வார்த்தைகளை,பத்திகளை,பக்கங்களை எளிதாக
ஃபார்மெட்செய்ய முடியும். எழுத்துப்பிழைகளை
சரிபார்க்கும் Spell Checkingவசதி உண்டு. மேலும்
Dictionaryமற்றும் Theasaurus வசதியும் இதில் உண்டு.
இந்த சாப்ட் வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இதை நீங்கள் இன்ஸ்டால்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.


இதில் உள்ள முதல் பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ள New அல்லது Ctrl+N கிளிக்
செய்ய உங்களுக்கு புதிய விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் என்ன வசதியென்றால் நீங்கள் விண்டோக்கள்
எந்தனை வேண்டமானாலும் திறந்து கொள்ளலாம்.
தனிதனியே இருபது கடிதங்கள் வேண்டுமா -
அத்தனை விணடோக்களையும் திறந்து கொள்ளலாம்.
எக்ஸெல்லில் தனித்தனியாக ஷீட் நீங்கள் உபயோ
கித்திருப்பீர்கள் அதுபோல் இதில் வசதி உள்ளது.
நீங்கள் பைலை தயார் செய்து விட்டீர்கள்.
இனி அதை டெம்ளேட்டாகவோ - பிடிஎப் ஆகவோ -
எச்டிஎம் எல் ஆகவோ மாற்றலாம்.கீழே உள்ள
விண்டோவை பாருங்கள்.






பிடிஎப் பைலாக மாற்ற:-

மேலும் இதில் உள்ள பைல் ஆப்ஷன் பயன் படுத்தி
உங்கள் பைல் எத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை
சேவ் ஆகவேண்டும் என நிர்ணயிக்கலாம்.


இரண்டாவதாக மூன்றாவதாக உள்ள பட்டனை கிளிக்
செய்து தேவையான வசதிகளை பெறலாம்.

நான்காவதாக உள்ள பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் உள்ள Spell Check கிளிக் செய்து வார்த்தைகளின்
எழுத்துக்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.





ஐந்தாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் உள்ள Minimal Layout கிளிக் செய்ய சாதாரண
லேஅவுட்டும் Classic Layout கிளிக் செய்ய



கீழ்கண்டலேஅவுட் ஓப்பன் ஆகும்.



மேலும் இதில் ஆபிஸில் உள்ள ரூலர் முதல் கொண்டு அனைத்
தையும் கொண்டுவரலாம். அடுத்துள்ள பட்டனை கிளிக்
செய்ய உங்களுக்கு உங்கள் பைலில் உள்ள Document Counts
எளிதாக கிடைக்கும்.


அடுத்துள்ளது மேனேஜ் டேப் மூலம் எந்த டேப்புக்கும்
நீங்கள் எளிதாக செல்லலாம்.
அடுத்துள்ளது Zoom settings. கீழ்கண்ட விண் டோவை
பாருங்கள்.தேவையான அளவை செட் செய்திடலாம்.

அடுத்துள்ளது டைம் மற்றும் டேட் செட் டிங். அன்றைய
தேதியை யும் டைமையும் எளிதாக செட் செய்திடலாம்.


அடுத்துள்ளது Font செட்டிங்கஸ் . கீழே உள்ள விண்டோவை
பாருங்கள்.தேவையானதை தேர்வு செய்யலாம்.


அடுத்துள்ளது அலைன்மெண்ட் . தேவையானதை
தேர்வு செய்துகொள்ளலாம்.


அடுத்து இதில் கேமராவும் உள்ளது. ஸ்கிரினில் உள்ள
படத்தை நாம் எடுத்து இந்த பைலில் சேர்த்துவிடலாம்.
கீழ்கண்ட விண்டோவை பாருங்கள்.



இதன் மூலம் நான் எடுத்த படம் கீழே:-


கடைசியாக உள்ள பட்டனை கிளிக் செய்து வேண்டிய
விவரங்களை பெறலாம்.


கருத்துரையிடுக Disqus

 
Top