0
இந்த சாப்ட்வேர் சின்னதுதான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்தும உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதன் இடதுபுறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஇருக்கும்.
அதில் முதலில் உள்ள Source கட்டத்தில நீங்கள் வாட்டர் மார்க் செய்ய வேண்டிய புகைப்படத்தை உங்கள் கணிணியில் இருந்து தேர்வு செய்யுங்கள்.அதைப்போல நீங்கள் வாட்டர்மார்க் செய்த படத்தை சேமிக்க விரும்பும் இடத்தை யும் தேர்வு செய்யுங்கள்.உங்கள் புகைப்படம் எந்த பார்மட்டில் வேண்டுமோ அந்த பார்மட்டையும் தரத்தையும் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். இப்போது அதற்கு கீழே கவனியுங்கள்.உங்களுக்கு கீழ்கணட் விண்:டோ இருக்கும்.
Resize image -ல் நீங்கள் படத்தின் அளவுகளை மாற்றவேண்டியிருந்தால் மாற்றி கொள்ளுங்கள்.அதன் கீழே பாருங்கள்.Transparancy-ல் உங்கள் பெயரோ - புகைப்படமோ எந்த சதவீதத்தில் வரவேண்டுமோ அதை வைத்துக்கொள்ளுங்கள். சதவீதத்தை மாற்றுவதன் மூலம் புகைப்படத்தில் வாட்டர் மார்க்குகள் குறைவது - அதிகமாவதை காணலாம். அடுத்து அதன் கீழே பாருங்கள். வாட்டர் மார்க லெகேஷன். இதில உங்கள் பெயரோ - புகைப்படமோ எந்த இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்துகொள்ளுஙகள். படத்தில் நடுவிலா - ஒரத்திலா - மேல்புறமா என முடிவுசெய்து அதில் உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்போது வலதுபுறம் பாருங்கள். கீழே உள்ள விண்டோ உங்களுக்கு தெரியும்.
இதில் இரண்டு வகைகள் உள்ளது. நீங்கள் பெயர் கொண்டுவரப்போகின்றீர்களா - அல்லது எழுத்தை கொண்டுவரப்போகின்றீர்களா என: முடிவு செய்து கொள்ளுயுஙகள்.பெயரை புகைப்படத்தில் கொண்டுவருவதானால் Use Test என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்து உங்கள் பெயரை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். கீழே உங்களுக்கு பாண்ட் வகைகளும் - அளவுகளும்,எழுத்து வரும் ஆங்கில்களும்,எழுத்தின் நிறமும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.இதன் கீழே உள்ள பிரிவியு மூலம் உங்கள் எழுத்துக்களை சரிசெய்து கொள்ளலாம்.அதைப்போலவே நமது புகைப்படம் வாட்டர் மார்க்காக வரவேண்டுமானால் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுஙகள். இப்போது கீழே உள்ள ஸ்டார்ட் பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய படம் ஒவ்வொன்றாக மாறுவதை ப்ரிவியுவில் காணுங்கள். மொத்தம் முடிந்ததும் நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தீர்களே யானால் உங்கள் படங்கள் மாறியிருப்பதை காணலாம். என்ன சுலபமாக இருக்கின்றதா..?

கருத்துரையிடுக Disqus

 
Top