0
இது வெறும் 5 எம்.பி்.கொள்ளளவு தான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கி நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள நீல முக்கோணத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு எல்லா வகைகளும் தெரியவரும். அதில் நீங்கள் பிஸினஸ் மற்றும் குடும்பம் என தேர்வு செய்துகொள்ளலாம்.பின்னர் அதில் உள்ள + குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில முதல் டேப்பில் உள்ளதில் நீங்கள் சேமிக்க வேண்டியவரின் பெயர்,டைட்டில், கம்பெனி பெயர், முழு முகவரி,அனைத்தும் தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அடுத்து அவரைப்பற்றி சிறப்பு விமர்சனம் ஏதாவது இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். அதில் நிறைய கேட்டகிரி இருக்கும்..
வருகின்ற கேட்டகிரியில் அவர் எந்த வகையில் வருகின்றாரோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்துள்ள டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் :ஆகும்
இந்த விண்டோவில் மொத்தம் 12 குட்டி குட்டி விண்டோக்கள் இருக்கும். இதில முதலில் உள்ள விண்டோவின் டவுண்லோட் ஏரோவினை கிளிக் செய்ய உங்களுக்கு மேலே உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் அவரின் எந்த தகவலை நீங்கள் சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து எதிரில் உள்ள விண்டோவில் அதற்குரிய தகவலை தட்டச்சு செய்யுங்கள்.கடைசியாக நீங்கள் தகவலை உள்ளீடு செய்தவரின் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இங்கு இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் புகைப்படம் 500 கே.பிக்குள் இருக்க வேண்டும்.
இறுதியாக ஓ.கே. கொடுங்கள். அவ்வளவுதான். ஒருவருடைய மொத்த தகவல்கள்(மொத்தம் 25 வரும்) நீங்கள் சேமித்தாகிவிட்டது.
இதில சேமித்துள்ள தகவல்களை நீக்கி கொள்ளவும் முடியும். அதைப்போல் ஒருவருடைய பெயரையும் சுலபமாக சர்ச் செய்து தேட இங்குள்ள சர்ச் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்டட்டிக்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில நீங்கள் உள்ளீடு செய்துள்ள நபர்களின் முதல் எழுத்துக்களை வைத்து எவ்வளவுபேர உள்ளனர் என தெரிந்து கொள்ளலாம்.
அடுத்துள்ளது ரிப்போர்ட்.இதை கிளிக் செய்தால்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில ஒருவரோ - அல்லது மொத்தநபர்களதோ -தேர்வு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். அதில் அவரின எந்த விவரங்கள் தேவையோ அதை மட்டும் தேவையான பைல்வகைகளில் சேமித்துகொள்ளலாம்.
கடைசியாக உள்ள கிரியேட் கிளிக் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.இதனை எச்டிஎம்எல் பைலாகவும் எக்ஸெல் பைலாகவும் சேமித்துக்கொள்ளலாம். பொறுமையாக தகவல்களை உள்ளீடு செய்து உபயோகித்து பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top