0
இனிவரும் காலங்களில் அவர்களின் அறிவு வளர இந்த சாப்ட்வேரை பதிவிறக்கி அவர்களுக்கு கொடுங்கள்.மொத்தம் 12 வகையான அறிவு வளரக்கூடிய ஆங்கிலம் -கணக்கு -தட்டச்சு விளையாட்டுகள் உள்ளன.
குறைந்த கொள்ளளவாக 800 கே.பி. அளவுடன் இலவச சாப்ட்வேராக உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள How Many என்பதை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்சரியானவிடையைகிளிக்செய்யவும்.இதைப்போலகூட்டல்.கழித்தல். பெருக்கல் என இதில் கணக்குகள் உள்ளது. நான் தேர்வு செய்துள்ள பெருக்கல் கணக்கை கீழே காணுங்கள்.
இதைப்போல Pick a Picture என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வந்துள்ள வார்த்தைகளுக்கான சரியான படத்தை தேர்வு செய்யுங்கள்.
அடுத்துள்ளது First Letter என்பதை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் படத்திற்கு ஏற்ப முதல் வார்த்தையை தேர்வு செய்யவும்.
அடுத்துள்ளது Memory என்பதை கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள கட்டங்களில் படங்கள் மறைந்திருக்கும். படத்தை தேர்வு செய்து அதைப்போல படம் வேறு எங்குள்ளது என்று பார்க்கவும்.
அடுததுள்ளது Word; Memory. இதில் 6 படங்களும் அதற்கான வார்த்தைகளும் இருக்கும். சரியான படத்திற்கு ஏற்ப வார்ததையை தேர்வு செய்யவேண்டும். அதைப்போலவே Hangman.சரியான வார்த்தையை நிரப்ப வேண்டும். இல்லையென்றால் மனித உருவம் Hang பண்ணி கொள்ளும். (இதைப்பற்றி ஏற்கனவே தனியே பதிவிட்டுள்ளேன்) அடுத்துள்ளது முறையே ABC Rain.Letter Rain.& 1-2 Rain .குழந்தைகள் தட்டச்சு செய்ய சுலபமான வழி இதுவாகும். கீபோர்டில் கையை சரியான பொசிஷனில் வைத்துக்கொண்டு வரும் லெட்டர்களு்க்கான எழுத்தை தட்டச்சு செய்யவேண்டும். சரியாக எழுத்தை தட்டச்சு செய்தால எழுத்து அங்கேயே நின்று அடுத்த எழுத்து கீழே வர ஆரம்பிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே தனிதனி லெட்டர் மழை..அடுத்ததாக இரண்டு இரண்டு எண்களாக வரும். அதை இரண்டையும் கூட்டி சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும். விடை சரியாக இருந்தால் லெட்டர் அந்தரத்தில் நின்று விடும்.கீழே உள்ள விண்டோவினை பாரு்ங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top