0
நாமே பாடலை பாடி நாமே நமது பாடலை கேட்பது தனி இன்பம். கம்யுட்டரிலேயே பதிவு செய்ய வசதி உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அது பதிவு ஆகும். மேற்கொண்டு பதிவு செய்ய அதை நாம் நீடிக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு அந்த குறையை போக்குகின்றது. 400 கே.பி. (அதாவது 1 எம்.பி.யில் பாதி) அளவே உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யுட்டரில் நிறுவிய பின உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேற்புறம் உங்களுக்கு Input என்கின்ற பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் உங்களுடைய Device தேர்வு செய்து கொண்டு பின்னர் நீங்கள் எதிலிருந்து பாடல்கள் பதிவு செய்ய போகின்றீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
அடுத்து உங்களுக்கு பாடல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ Output மூலம் அதனை தேர்வு செய்யுங்கள்.
இதிலுள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். சிடி பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
எல்லாம் தயார் செய்துவிட்டீர்களா. இப்போது இதில் உள்ள ரெகார்ட் பட்டனை அழுத்துங்கள்.ஆடியோ பதிவாகும்.
தேவையானது பதிவானதும் ஸ்டாப் பட்ட ன் மூலம் நிறுத்துங்கள். இப்போது நீங்க்ள சேமித்துள்ள போல்டரில் சென்று பார்த்தால் பாடல் ப்திவாகிஇருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top