0
காலண்டரை நாம் நமது பிரிண்டரிலேயே நமது புகைப்டம் வைத்து தயாரித்துக்கொள்ளலாம். சிவகாசியில் திபாவளி முடிந்ததும் அச்சக உரிமையாளர்கள் கவனம் செலுத்துவது காலண்டர் தயாரிப்பில்தான் அந்த காலண்டர் தயாரிப்புக்கான சின்ன சாப்ட்வேரை இஙகு பதிவிடுகி்ன்றேன். 20 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.வலது புறம் காலணடரின் ப்ரிவியுவும் இடதுபுறம் அதற்கான் செட்டிங்ஸ்ம் காணப்படும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மாதக்காலண்டரின் நிறம் - எழுத்துருக்களை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Style Browser -ல் Classic Home Monthly Modern My Styles Original Special Standart என 75க் கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளது. நாம் தேவையானதை கிளிக் செய்தால் போதுமானது்.
நமது திருமணநாள் - பிறந்த நாள் - குழந்தைகள் பிறந்தநாள் - முக்கிய நிகழ்ச்சிகள் நாள் என இதில் குறித்துவைக்கும் வசதிஉள்ளது. நாமே நமது விடுமுறை நாட்களை உருவாக்கி கொள்ளலாம்.
காலண்டரின் முகப்பில் தேவையான பெயரை கொடுக்கலாம். இதனால் இதனை வாங்கியவர்கள் காலண்டரை பார்க்கும் சமயம் நம்மை நினைவு கொள்வார்கள்.
இதன்படி உருவாக்கிய டிசைன் கீழே பாருங்கள்.

நடுவில் வரும் புகைப்படமும் சரி - பின்புறம் வரும் புகைப்படமும் சரி..நாம்விருப்பபடி உருவாக்கி கொள்ளலாம். ஓரே காலண்டரில் குருப் போட்டோவும் உருவாக்கலாம். Adding Photoவில் No Photo- Single Photo- Collage என எது தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
காலண்டரின் நடுவில் கிளிப் ஆர்ட் படம் வேண்டுமா? அதனையும்இதன் மூலம் கொண்டுவரலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள Make Calender கிளிக் செய்து பின்னர் பிரிண்ட் போட்டுக்கொள்ளவும்.போட்டோஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் அவர்களின் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் போட்டோவை யே போட்டு காலண்டராக கொடுத்தால் என்றென்றும் நம்மை நினைவில்கொள்வார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top