0
இந்த விளையாட்டு வாழைப்பழம் சாப்பிடும் விளையாட்டு. என்ன இதில் உள்ள பேயை ஏமாற்றி நாம் வாழைப்பழம் சாப்பிடவேண்டும். நாம் கொஞ்சம் ஏமாந்தால் பேய் நம்மை சாப்பிட்டுவிடும்.400 கே.பி. அளவுள்ள மிக சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோஓப்பன் ஆகும்.
நடுவில் உள்ள மனிதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் கீ போர்டில் உள்ள அம்புகுறிகளை பயன்படுத்தி வாழைப்பழம் இருக்கும் இடத்திற்கு வந்து வாழைப்பழம் சாப்பிடவேண்டும்.
வெற்றிகரமாக அந்த விண்டோக்களில் உள்ள வாழைப்பழங்களை நீங்கள் சாப்பிட்டதும் உங்களுக்கு அடுத்த லெவேல் வரும்.. இதில் வாழைப்பழங்கள் நடுவே பேய் காவல் இருக்கும். இதனை ஏமாற்றி சாப்பிடவேண்டும்.நீல கலர் பாக்ஸை நீங்கள் கதவாக உபயோகித்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு லெவலாக செல்ல செல்ல விளையாட்டு கடினமானதாக இருக்கும். அதைப்போல் ஒன்றுக்கும் மேற்பட்ட பேய்கள் உங்களை சாப்பிட்டு விட துடிக்கும். பார்க்கலாம் நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுகின்றீர்களா - அல்லது பேய் உங்களை சாப்பிடுகின்றதா என்று....!இதுபோல சின்ன சின்ன விளையாட்டுக்களை நாமே உருவாக்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top