0
எந்தவகை கடன் ஆனாலும் நாம் முதலில் நாடுவது வங்கி களையே...நமக்கு தேவைபடும் பணத்தை சொன்னால் ஏதோ கணக்கிட்டு மாதம் நீ இவ்வளவு கட்டு என்று சொல்வார்கள். அல்லது நாம் கட்டும்தொகையை சொன்னால் அதற்கு ஏற்ப இவ்வளவு மாதங்கள் நீங்கள் பணம் கட்டவேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் கணக்கை எவ்வாறு போடுகின்றார்கள். அந்த கணக்கை நாம் தெரிந்துகொள்ளலாமா? அதற்கான சாப்ட்வேர்தான் இது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் நான்கு பிரிவாக விண்டோவினை பிரித்திருப்பார்கள். முதல் பிரிவில் நாம் வாங்கும் தொகை - வட்டி - கட்டும் தவணைகள் - வங்கி கட்டணம் முதலியவைகளை நாம் நிரப்ப வேண்டும். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் சுலபமாக தொகைகளை நாம் நிரப்பிக்கொள்ளலாம். நான் ரூபாய் 5 லட்சம்(5,00,000) கடன் தொகை குறித்துள்ளேன். அதற்கு வட்டியாக
9.5 % சதவீதமும் வங்கி கட்டணமாக 2% வீதமும் திருப்பிசெலுத்தும் காலம் 10 வருடங்களாகவும் குறித்துள்ளேன். முன்னரே செலுத்தும் தொகையை கணக்கிடுவதற்கும் இதில வசதி உள்ளது.
எனக்கு மாததவணையாக ரூ6.470-வந்துள்ளது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒவ்வோரு மாதமும் நாம் கட்டும் தொகை அதில் அசல் எவ்வளவு - வட்டி எவ்வளவு- மீதமுள்ள தொகை எவ்வளவு என இதில் சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.
வருடாந்திர தொகையையும் நாம் இதில் தெரிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடனுக்காக வங்கியை அணுகுவதற்கு முன்னர் இந்த அட்டவணைமூலம் நாம் சுலபமாக வட்டியையும் திருப்பி செலுத்தும் தொகையையும் கணக்கிட்டுபின்னர் வங்கிசென்றால் அவர்களிடம் பேசுவதற்கு வசதியாக இருக்கும்.

கருத்துரையிடுக Disqus

 
Top