0
இன்ஸ்டென்ட் காபி,இன்ஸ்டென்ட் மிக்ஸ் கேள்விபட்டிருப்பீர்கள். இன்ஸ்டென்ட் டைப் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா? குறிப்பிட்ட முகவரிகள். அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகியவற்றை முதலில் தட்டச்சு செய்துவிட்டு குறிப்பிட்ட எழுததுக்களை அழுத்துவது மூலம் முழுமையாக அந்த வார்த்தைகளை கொண்டுவரலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள + என்கின்ற பச்சைநிற பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான எழுத்தினை தட்டச்சு செய்து பின் அதற்கு எதிரே உள்ள கட்டத்தில் தேவையான வார்த்தையை தட்டச்சு செய்யவும்.இதுபோல் விருப்பமான எழுத்துக்களுக்கு விருப்பமான முகவரிகள் வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளலாம். அடுத்து நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனையும் ஒப்பன் செய்து இந்த ஷார்ட்கட் எழுத்தினை தட்டச்சு செய்ய அங்கு உங்களுக்கு முழுமையான வார்த்தைகள் கிடைக்கும்.நமக்கு தட்டச்சு வேலை சுலபமாகும்.இதனால் அலுவலக பணிகளை விரைந்து முடித்து நல்லபெயர் வாங்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top