0
நம்மிடம் உள்ள புகைப்படங்களை விதவிதமான ஆல்பங்களாக மாற்றி அழகுப்படுத்தலாம். 250 ப்ரேம்கள் - 5 மாடல்கள் என விதவிதமாக இந்த சாப்ட்வேரில் உள்ளது.22 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கீழ்புறம் உள்ள Select Photo என்பதனை கிளிக் செய்து தேவையான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
அதைப்போல நீங்கள் Select Frame என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். அதிலிருந்து தேவையானதை தேர்வு செய்யுங்கள்.



ஒவ்வொரு புகைப்படத்தையும் தேர்வு செய்து டபுள்கிளிக் செய்ய உங்களது புகைப்படம் அடுத்த விண்டோவில் உள்ள ஆல்பத்தில் செட்டாகிவிடும். நீங்கள் தேர்வு செய்த படம் ஆல்பமாக கீழே கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top