0
கார்டூன்களிலும் Tom and Jerry பிரசித்தம். சிறியவர்கள் முதல்பெரியவர்கள் வரை அதை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.இன்று அந்த விளையாட்டையே நாம் விளையாடலாம். இதில் நாம் விருப்பபடி டாமாகவும் இல்லை ஜெர்ரியாகவும் மாறிகொள்ளலாம். அப்புறம் என்ன உங்களுக்கு யாரை பழிவாங்கவேண்டுமோ அவர்களை கற்பனை செய்துகொண்டு விளையாடி ஜமாயுஙகள். கொஞ்சம் பெரிய சைஸாக 75 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
உங்கள் மானிட்டரின் முழுவதுமோ - அல்லது சின்ன விண்டோவிலோ என தேர்வு செய்துகொண்டு Play பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இதில் உங்கள் விருப்பபடி நீங்கள் Tom வேண்டுமோ அல்லது Jerry வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் சண்டை போடும் இடம் வீட்டுக்கு உள்ளேயா - அல்லது தோட்டத்திலா என் தேர்வு செய்துகொள்ளுங்கள். தோட்டத்தில் விளையாடும்போது-
வீட்டுக்குள் விளையாடும் போது -
இதில் நீங்கள் பொருட்களை துாக்கி எரிய, எகிறி குதிக்க. ஒட என கீ களின் ஆக்ஷன்ஸ் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்

கருத்துரையிடுக Disqus

 
Top