0

தேவையான பொருட்கள்பப்பாளிக்காய் - 1
சிறுப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 10

வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:தேங்காய்த்துருவல் - 1/4 மூடி
கடலைப்பருப்பு - 1/4ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
காய்ந்தமிள்காய் - 1

தாளிக்ககடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது,
காய்ந்த மிளகாய் - 1
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:பப்பாளியை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.
பப்பாளிக்காய், பருப்பு மஞ்சள்த்தூள் உப்பு பச்சமிளகாய் சேர்த்து வேகவைத்து தனியாக வைக்கவும்
பிறகு கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய பொருட்கள் போட்டு தாளிக்கவும்.
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பிறகு வேக வைத்த பப்பாளி கலவையினை சேர்க்கவும் இதனுடன்
அரைத்த விழுதுகளை சேர்த்து வேகவைத்து இறக்கவும்...

சூடான சுவையான பப்பாளிக்கூட்டு ரெடி

கருத்துரையிடுக Disqus

 
Top