நாசா நடத்திய போட்டியில் புற ஊதாக்கதிர்கள் பற்றி
கட்டுரை சமர்ப்பித்து நெதர்லாந்து சென்று முதல் பரிசை தட்டிக்கொண்டு
வந்துள்ளனர் நம் தமிழக மாணவிகளான துர்காவும், திவ்யாவும். இந்த மாணவிகளை
கட்டுரைக்காக சந்தித்தபோது "பல ஐரோப்பிய நாடுகள் வெளிச்சம் இல்லாமல்
பனியிலேயே மூழ்கிக் கிடக்கின்றன. மற்ற நாடுகளில் இல்லாத சூரியஒளி என்ற
அற்புதம் நம்ம நாட்டுல அதிகமாவே இருக்கு. மின்சாரப் பற்றாக்குறை என்று
குறைகூறும் நம் ஆட்சியாளர்கள் சூரிய
ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால் என்ன என்று முற்போக்குத்தனமான தங்கள்
கருத்தை கூறினர் இந்த மாணவிகள். நம்ம தமிழகத்துல இந்தியாவுக்கே மின்சாரம்
தர நெய்வேலி, கல்பாக்கம் இருக்கு. ஆனால், 12 மணிநேர பவர்கட். பல
மாநிலங்களில் அணுவுலையும் இல்லை, நிலக்கரி சுரங்கமும் இல்லை. ஆனால்
அங்கெல்லாம் மின்சாரத் தடையே கிடையாது. அவர்களால் மட்டும் எப்படி
சாத்தியப்படுத்த முடிகிறது? கூடங்குளம் அமைத்தால் மின்சாரத் தடையே
இருக்காது என்பதெல்லாம் ஊற ஏமாத்துற கதை.
கருத்துரையிடுக Facebook Disqus