0

நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே



இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கிருதோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கள் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூட படிக்கும் காலை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்


 
கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் FAREWELL PARTY

கருத்துரையிடுக Disqus

 
Top