தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு 1கப்
தேங்காய் பூ 3கப்
முந்திரி , பாதம், பிஸ்தா, கிஸ்மிஸ், தேவைக்கு
ஏலக்காய்த்தூள் 1 சிட்டிகை
உப்பு 1 சிட்டிகை
சீனி அல்லது கருப்பட்டி தேவைக்கு
பச்சரிசி, உப்பு சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு சிறு சிறு உருன்டைகளாக செய்து வைக்கவும்.
தேங்காய் பூ, சீனி, முந்திரி, பாதம், பிஸ்தா, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
அரிசி மாவு உருண்டைகளை தட்டையாக தட்டி அதன் நடுவில் தேங்காய்ப்பூ கலவையினை தேவைக்கு வைத்து மடித்து விடவும்.
இதனை இட்லி சட்டியில் வைத்து 10நிமிடம் வேக வைத்து இறக்கவும்..
சுவையான ஆரோக்கியமான நட்ஸ் மடிப்பு கொழுக்கட்டை ரெடி... சுவைத்து பாருங்கள்
கருத்துரையிடுக Facebook Disqus